கரூர், ஆக.26 -
விளையாட்டுப் போட்டி களில் பல்வேறு சாதனை புரிந்த மாணவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கும் விழா கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில் நடைபெற் றது. இதில் கரூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் த.பிரபு சங்கர் சாதனை புரிந்த மாண வர்களை நேரில் அழைத்து பாராட்டினார்.
கரூர் புகளூர் தமிழ்நாடு காகித ஆலையில் பணிபுரி யும் தொழிலாளி ஆனந்த ஐயப்பன்-பரணி ஆகியோ ரது மகன் குகன் கார்த்திக் கேஸ்வரன். இவர் டி.என்.பி.எல் பப்ளிக் பள்ளியில் படித்து வருகிறார். இவர் சிலம்பம் தற்காப்பு கலை யில் பல்வேறு உலக சாதனை கள் மற்றும் விருதுகள் பெற்றுள்ளதை பாராட்டி மாவட்ட ஆட்சியர் நினைவுப் பரிசு வழங்கினார்.
மாவட்ட விளையாட்டுத் துறை அலுவலர்கள் மற்றும் பாரதம் சிலம்பம் அகாடமி பயிற்சியாளர்கள் கிருஷ்ண ராஜ், செளந்தரராஜன் ஆகி யோர் உடனிருந்தனர்.