districts

img

இடிந்து விழும் நிலையில் மாணவர் விடுதி: பாதுகாப்பு கேட்டு மாணவர்கள் சாலை மறியல்

தஞ்சாவூர், ஜூலை 11-  

     தஞ்சாவூரில் உள்ள பிற்  படுத்தப்பட்டோர் நல விடுதி யின் கட்டிடம் எந்த நேரத்தி லும் இடிந்து விழக்கூடிய, மிக மோசமாக நிலையில் உள்ளது. இதனை உடனடி யாக இடித்துவிட்டு புதிய கட்டிடம் வேண்டும் என வலி யுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் தஞ்சை - திருச்சி நெடுஞ்சாலையில் செவ்வாயன்று சாலை மறி யல் நடைபெற்றது.

   தஞ்சை மன்னர் சர போஜி அரசு கல்லூரிக்கு  உட்பட்ட பிற்படுத்தப்பட் டோர் நல மாணவர் விடுதி யில், சரபோஜி கல்லூரியில் படிக்கக் கூடிய 200-க்கும்  மேற்பட்ட மாணவர்கள் தங்கி யுள்ளனர். இந்தக் கட்டிடம் 45 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. பழமை யானதாக இருப்பதால், மழைக்காலங்களில் கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியும் இடிந்து விழக் கூடிய நிலை உள்ளது. தினந்தோறும் மாணவர்கள் உயிர் பயத்தோடு தங்கிப் படித்து வருகின்றனர்.  

   இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுக்கப்பட்டது. ஆனால் ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனைக் கண்டித்தும், மாணவர்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரியும், புதிய விடுதி அமைத்து தரக் கோரியும் இந்திய மாணவர்  சங்கம் தலைமையில் விடுதி மாணவர்கள் சாலை மறி யல் போராட்டம் நடத்தினர். மாணவர் சங்க மாநிலத் தலைவர் கோ.அரவிந்தசாமி பேசினார். தஞ்சை மாவட் டத் தலைவர் அர்ஜூன், மாவட்டச் செயலாளர் கு. சந்துரு முன்னிலை வகித்த னர்.

     தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்  துறையினர், இதுகுறித்து சம்பந்தப்பட்ட  அலுவலர்களி டம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரி வித்தனர். இதையடுத்து மறி யல் கைவிடப்பட்டது.

;