ருவாரூர், மே 25-
இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் நடைபெறும் நடைபயணக்குழுவினருக்கு திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே வரவேற்பு அளிக்கப்பட்டு, தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் அனிபா தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க தலைவர் பெ.சண்முகம், சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன், மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் மற்றும் சிபிஎம், மாணவர், வாலிபர், விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.