districts

img

டிச.10 வாகன நிறுத்த போராட்டம் சிஐடியு தெருமுனை பிரச்சாரம்

அறந்தாங்கி, டிச. 7 - ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்க வலியுறுத்தி டிச.10 அன்று பகல் 12 மணி முதல் 12.10 வரை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் இயங்கும் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தும் போராட்டத்தை விளக்கி செக்போஸ்ட் அக்னி பஜார், கட்டுமாவடி சாலை முக்கம், பட்டுக்கோட்டை சாலை, பேருந்து நிலையம் அருகே உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. சிஐடியு ஒருங்கிணைப்பாளர் கே.தங்கராஜ் தலைமை வகித்தார். சிபிஎம் தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா, நகரச் செயலாளர் ஏ.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட தலைவர் க.முகமதுஅலி ஜின்னா, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கர்ணா, மாவட்ட வழக்கறிஞர் சங்க நிர்வாகி அலாவுதீன், மின் அரங்க நிர்வாகி கே. நடராஜன் ஆகியோர் விளக்கி பேசினர். திருச்சிராப்பள்ளி ஒன்றிய மோடி அரசு பெட்ரோல், டீசல் மீது 270 சதவீத கலால் வரி விதிப்பதால் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது.

மேலும் சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் தற்போது குறைந்துள்ள நிலையில், ஒன்றிய அரசு விலையை குறைக்க மறுக்கிறது. இதனால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிறது.  இதனை விளக்கி திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் செவ்வாயன்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.சி.பாண்டியன் தலைமை வகித்தார். இதில் மாதர் சங்க மாநகர் மாவட்ட தலைவர் ரேணுகா, சிஐடியு மாவட்ட பொருளாளர் வி.கே. ராஜேந்திரன், மாற்றுத்திறனாளிகள் சங்க பொறுப்பாளர் மணிமாறன், தரைக்கடை சங்க தலைவர் கணேசன், கட்டுமான சங்க தலைவர் பாலு, ஆட்டோ ஸ்டாண்ட் தலைவர் முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;