districts

img

காட்டுச்சேரியில் குறுவட்ட தடகள போட்டி

மயிலாடுதுறை, ஆக.5 - மயிலாடுதுறை மாவட் டம், தரங்கம்பாடி வட்டம் காட்டுச்சேரி ஊராட்சி சமத்துவபுரத்தில் உள்ள அரசு விளையாட்டு மை தானத்தில், தரங்கம்பாடி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் அண் மையில் நடைபெற்றன.  6 பிரிவுகளின் கீழ்  நடைபெற்ற போட்டியில்  42 பள்ளிகளைச் சேர்ந்த 800-க்கும் மேற் பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று ஓட்டப் பந்தயம், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல்,  குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு தட களப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு  பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும்  நிகழ்ச்சி நடைபெற்றது.  பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும்  சான்றிதழ் வழங்கிப் பேசினார். தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், தெற்கு ஒன்றி யச் செயலாளர் எம்.அப்துல் மாலிக், உடற் கல்வி ஆசிரியர்கள் பிரபாகரன், விநாயகம் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.