districts

காவிரி அய்யாறு உப்பாறு நீர்த்தேக்க நீர் வழி இணைப்பை செயல்படுத்துக அனைத்து விவசாய அமைப்புகள் வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 2 -

    திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் ஒன்றியம் தெற்கு சிறுப்பத் தூர் உப்பாறு நீர்த்தேக்கம் விவசாயி கள் கூட்டமைப்பு மற்றும் அனைத்து விவசாய அமைப்புகளின்  ஆலோசனை கூட்டம் திருவெள்ள றையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். கூட்டத்தில் அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலப் பொருளாளர் பழநிசாமி, மாநிலக் குழு உறுப்பினர் சந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் நடராஜன், மாவட்டத் தலைவர் சுப்ரமணியன், சிபிஎம் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் மனோகரன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பேசினர்.

   திருச்சி மாவட்டம், மண்ணச்ச நல்லூர் ஒன்றியத்தில் தெற்கு சிறுப் பத்தூரில் உப்பாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கத் தின் கொள்ளளவு 80 மீட்டர் கனஅடி, கரையின் நீளம் 720 மீட்டர், அகலம் 365 மீட்டர் ஆகும். தமிழ்நாடு அரசு  பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது.

     இந்த நீர்த்தேக்கத்திற்கு புலி வலம், பெரமங்கலம் ஏரி, மணியம் பட்டி, வீராணி ஆகிய ஊர்களின் வழி யாகவும் கீழப்பட்டி, சிறுகுடி, ஓமாந் தூர் வழியாகவும் மழைக்காலங்க ளில் மழைநீர் வந்து சேரும். இவ் வாறு வந்து சேரும் மழைநீர் இரண்டு  மதகுகள் வழியாக மண்ணச்ச நல்லூரை சுற்றியுள்ள சுமார் 40 கிரா மங்களில், 1785 ஏக்கர் விவசாயத் துக்கு பயன்படுகிறது. இதனால் இந்தப் பகுதியில் உள்ள 50 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்தனர்.

   தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தின் போது  காவிரி மற்றும் அய்யாறில் இருந்து  இந்த உப்பாறு நீர்த்தேக்கத்திற்கு நீர்  வழி இணைப்புக்கான ஒரு திட்டத்தை  தயார் செய்யப்பட்டது. அதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு வழி முறைகளை கண்டறிந்து செயல் படுத்த எண்ணினார் எம்.ஜி.ஆர். ஆனால் காலப்போக்கில் அந்தத் திட்டத்தை அவரால் நிறைவேற்ற முடியவில்லை.  இந்நிலையில் இந்த நீர்த்தேக்கம்  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெய லலிதா ஆட்சியில் ரூ.1.40 கோடி மதிப் பில் புதுப்பிக்கப்பட்டது. கடுமை யான மழைக் காலங்களில் மட்டுமே, இந்த நீர்த் தேக்கத்தில் தண்ணீர்  நிரம்பி வந்ததால், விவசாயிகள் பயனடைந்தனர். ஆனால் தற்போது இந்த நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வரும்  வழிகளில் ஆங்காங்கே தடுப்பணை கள் கட்டப்பட்டதால் உப்பாறு நீர்த்தேக்கம் வறண்டு செடிகள், கொடிகள், மரங்கள் வளர்ந்து முட்புதர் களுடன் காடாக காட்சியளிக்கிறது. இதனால் இந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் சுமார் 500 அடிக் கும் கீழே சென்றுவிட்டது. விவசாய மும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை சீராக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் செயல்படுத்த எண்ணிய காவிரி-அய்யாறு-உப்பாறு  நீர்த்தேக்க நீர் வழி இணைப்பை செயல்படுத்த வேண்டும்.

    மேலும் மழைக்காலங்களில் கொல்லிமலையில் இருந்து வீணா கும் தண்ணீரை இந்த உப்பாற்று நீர்த்தேக்கத்தில் இணைக்க உரிய  நடவடிக்கையை விரைந்து எடுக்க  வலியுறுத்தி தமிழ்நாடு அரசு, மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை மற்றும் சட்டமன்ற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களிடத்தி லும் கோரிக்கை மனுக்கள் கொடுத்து வலியுறுத்தி உள்ளோம். ஆனாலும் திட்டத்தை செயல்படுத்திட தமிழ் நாடு அரசு எந்த முனைப்பும் காட்ட வில்லை.  

   எனவே கோரிக்கையை வலியு றுத்தி மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற  உறுப்பினர்கள், பொதுப்பணித் துறை அதிகாரிகள், வட்டாட்சியர்கள்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம தலைவர்களிடம் கோரிக்கை  மனு அளிப்பது. மேலும் விவசாயி கள், கிராம நலக் குழுக்கள், இளை ஞர் அமைப்புகள், மாதர் அமைப்பு கள் ஒன்றிணைந்து ஜூலை 3 ஆவது வாரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

;