districts

தஞ்சாவூரில் கால்நடை வளர்ப்புப் பயிற்சி

தஞ்சாவூர், ஜூலை 6-  தஞ்சாவூர்-

    திருச்சிராப்பள்ளி சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி  வரும், தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப்  பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு வளர்ப்பு  குறித்து ஜூலை 10, நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து ஜூலை 17, கறவை மாடு வளர்ப்பு குறித்து ஜூலை 24 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் பிற் பகல் 2 மணி வரை இலவசப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 04362-264665 என்ற எண்ணில்  தொடர்பு கொள்ளலாம் என தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மையத் தலைவர் கே.ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.

;