districts

img

டிஎன்எஸ்டிசி-சிஐடியு நாகை மண்டல நிர்வாக குழு உறுப்பினர் சி.மதிவாணன் இல்ல காதணி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் கொல்லுமாங்குடியில் டிஎன்எஸ்டிசி-சிஐடியு நாகை மண்டல நிர்வாக குழு உறுப்பினர் சி.மதிவாணன் இல்ல காதணி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம், டிஎன்எஸ்டிசி மண்டலப் பொருளாளர் எஸ்.வைத்தியநாதன் ஆகியோரிடம், தீக்கதிர் ஆண்டு சந்தாவுக்கான தொகை ரூ.2000 ஆயிரத்தை மதிவாணன் வழங்கினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜெ.முகமது உதுமான், சிஐடியு மாவட்ட செயலாளர் டி.முருகையன், தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், கும்பகோணம் மண்டல சிஐடியு பொதுச் செயலாளர் ஜி.மணிமாறன், நாகை மண்டலம் எஸ்.ஆர்.ராஜேந்திரன், தலைவர் சி.கோவிந்தராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.