districts

img

குடிசை வீட்டில் விபத்து பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நேரில் சந்தித்து ஆறுதல்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் எடுத்துக்கட்டி ஊராட்சி பூதனூர் காலனித் தெருவில் வசிக்கும் விஜயலெட்சுமி என்பவரது குடிசை வீட்டில், திங்களன்று இரவு மின்கசிவு ஏற்பட்டு எரிந்து விபத்துக்குள்ளானது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். முன்னாள் எம்எல்ஏ சித்திக், ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், ஊராட்சி மன்ற தலைவர் பைலட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.