புதுக்கோட்டை, ஜூன் 18 - எழுத்தாளர் கே.சதா சிவம் எழுதிய ‘மகிழ்வுடன் கற்றல்’ என்ற கட்டுரை நூல் வெளியீட்டு விழா திங்கள் கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. நிகழ்விற்கு புதுக் கோட்டைத் தமிழ் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். நூலின் முதல் பிரதியை மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி வெளியிட, எம். எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் பெற்றுக் கொண்டார். நூலை அறிமுகம் செய்து முனைவர் உஷாநந்தினி பேசினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூ.சண்மு கம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டி. வசந்தகுமார், தமிழ்நாடு அறி வியல் இயக்க செயற்குழு உறுப்பினர் எல்.பிரபாகரன், முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்திய மூர்த்தி, அறிவியல் இயக்க மாவட்டப் பொருளாளர் விமலா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக வளர்மதி மாத இதழ் ஆசிரியர் ப.வெங்கடேசன் வரவேற்க, அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் எம்.வீரமுத்து நன்றி கூறினார்.