தஞ்சாவூர், ஜூலை 2-
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் ரத்த சுத்திகரிப்பு சேவை தொடங்கப்பட்டது.
இந்தச் சேவையை தொடக்கி வைத்த கல்லூரி முதல்வர் ஆர்.பாலாஜி நாதன் செய்தியாளர்களிடம் தெரி விக்கையில், “தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஏற்கெ னவே 32 ரத்த சுத்திகரிப்பு கருவிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலை யில், தீவிர சிகிச்சை பிரிவில் இரு ரத்த சுத்திகரிப்பு கருவிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம், 4 நோயாளி களுக்கு ஒரே நேரத்தில் ரத்த சுத்தி கரிப்பு செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத் துள்ளது. இந்த வசதி மூலம் தீவிர சிகிச்சை பகுதி மற்றும் விஷமுறிவு, பாம்புக்கடி போன்ற நோயாளிகளுக்கு ரத்த சுத்திகரிப்பு செய்து, உயிரைக் காக்கும் நல்லதொரு வாய்ப்பு அமைந் துள்ளது. இந்த கருவிகள் ரூ.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.
முன்னதாக, தேசிய மருத்துவர்கள் நாளையொட்டி, இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் நடைபெற்ற குருதிக் கொடை முகாமை கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 100 பேர் நூறு அலகு கள் குருதிக் கொடை செய்தனர். விழாவில், கல்லூரி துணை முதல்வர் என்.ஆறுமுகம், நிலைய மருத்துவ அலுவலர்கள் ஏ.செல்வம், கெளதமன், உதவி நிலைய மருத்துவ அலுவலர் முகமது இத்ரிஷ், சிறுநீரக சிகிச்சைப் பிரிவு தலைமை மருத்துவர் வி.பி.கண்ணன் மற்றும் மருத்துவர்கள், ரத்த வங்கி அலுவலர் வேல்முருகன், இந்திய மருத்துவர் சங்கத்தின் தஞ்சாவூர் கிளைத் தலைவர் லியோ ஜோசப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.