districts

img

மணிப்பூர் கலவரத்தை கண்டுகொள்ளாத பாஜக அரசு வெகுஜன அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஜூலை 26 -

     மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கும் இனக் கலவரத்தை கண்டு கொள்ளாத, ஒன்றிய-மாநில பாஜக அரசுகளை கண் டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட  பல்வேறு வெகுஜன அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில் மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் திட்டச் செயலாளர் எம்.கலைச் செல்வன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், சிஐடியு மாவட்ட செயலா ளர் ப.மாரியப்பன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் ஏ.ஆர்.விஜய், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு கன்வீனர் பரி மளா, அங்கன்வாடி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் பேபி ஆகியோர் உரை யாற்றினர்.  

    மணல்மேடு அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரி முன்பு மாணவர் சங்கத்தின் கல்லூரி கிளை தலைவர் பிரவீன் தலைமை வகித்தார். கோரிக்கை களை விளக்கி மாவட்ட செயலாளர் மணி பாரதி உள்ளிட்டோர் பேசினர்.

தஞ்சாவூர்

      தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பேருந்து நிலையம் அருகில் சிபிஎம் ஒன்றி யச் செயலாளர்  ஏ.ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணத் தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு  அலுவலகம், இந்து சமயஅறநிலையத் துறை அலுவலகம்,  ஊராட்சி ஒன்றிய அலு வலகம், வணிக வரித்துறை அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அரசு அலு வலக முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற் றன. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார்.

    சிபிஎம் சார்பில் கும்பகோணம் தலைமை  தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநகர செய லாளர் செந்தில்குமார் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் உள்ளிட்ட பலர் பேசினர்.

திருச்சிராப்பள்ளி

     திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி செயலா ளர் தர்மா தலைமை வகித்தார். மத்திய  கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஸ்ரீதர் மற்றும்  பகுதி குழு உறுப்பினர்கள் பேசினர். தா. பேட்டை கடைவீதியில் ஒன்றிய குழு உறுப்பி னர் சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய  அமைப்பு சார்பில் தென்னூரில் சங்க  மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார்.

மன்னார்குடி

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பந்தலடியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஎம் நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப் பினர் ஆர்.சுமதி, ஒன்றியச் செயலாளர் கே. ஜெயபால், மாற்றுத்திறனாளிகள் சங்க  மாவட்டச் செயலாளர் டி.சந்திரா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்  கே.பிச்சைகண்ணு, சிஐடியு மாவட்ட பொறுப் பாளர் ஜி.ரகுபதி ஆகியோர் பேசினர்.  நீடாமங்கலத்தில் ஏ.லதா தலைமை  வகித்தார்.

     கொரடாச்சேரியில் ஊழியர்  சங்க வட்ட தலைவர் ஏ.லதா தலைமை  வகித்தார். திருத்துறைப்பூண்டி அருகே தண் டலசேரி அரசு கலை கல்லூரியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்க  மாவட்டச் செயலாளர் பா.ஆனந்த்  தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாவட் டம் கறம்பக்குடி அரசு கலை அறிவியல்  கல்லூரியில் மாணவர் சங்கத்தின் கல்லூரி  கிளைச் செயலாளர் ஏ.மதன்குமார் தலைமை  வகித்தார்.

 நாகப்பட்டினம்

     நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் கடைத்தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி உரையாற்றினார். கீழையூர்  மேற்கு ஒன்றியச் செயலாளர் டி.வெங்கட் ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வேதாரண்யம் வேதாரண்யம் கோட்டாட்சி யர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத் திற்கு வேதாரண்யம் வடக்கு ஒன்றியச் செய லாளர் வெற்றியழகன் தலைமை வகித்தார்.  தலைஞாயிறு கடைத்தெருவில் ஒன்றியச் செயலாளர் ராஜா பங்கேற்றார்.

கரூர்

      தோகைமலை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி யின் ஒன்றியச் செயலாளர் ஏ.பெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மா.ஜோதிபாசு கண்டன உரையாற்றினார்.

 அரியலூர்

     அரியலூர் அண்ணா சிலை அருகே ஒன்றியச் செயலாளர் அருண்பாண்டியன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பி னர் வாலண்டினா, மாவட்டச் செயலாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.