districts

img

பாடாவதியான பெட்டிகளுடன் பாலருவி எக்ஸ்பிரஸ்

திருநெல்வேலி,நவ. 20  வண்டி எண்: 16791பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லையிலிருந்து இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு, அம்பை, கடையம், தென்காசி, செங் கோட்டை, புனலூர், கொல்லம், கோட்டையம், எர்ணாகுளம், திருச்சூர் வழியாக கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு பகல் 12 மணிக்கு செல்லும் வகையில், பல வருடங்களாக இயக்கப்பட்டு வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் 11 முன்பதிவில்லாத பொது பெட்டிகளுடன் மட்டுமே இயக்கப்பட்ட இந்த ரயில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 4 ஸ்லீப்பர் கோச்சுகள் கூடுதலாக இணைத்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்  தமிழக மற்றும் கேரள மக்களுக்கு பேருதவியாக இருந்து  வருகிறது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் பயில்வதற்காக கேரளா பகுதியில் உள்ள மாணவர்கள் இந்த ரயிலை அதிகமாக பயன்படுத்துகின்றனர்,  மேலும் கேரளாவில் இருந்து மருத்துவத்திற்காக கேரளாவை சேர்ந்தவர்கள் நெல்லை மாவட்டத்திற்கு தினமும் வருகின்றனர் .நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு பணிக்கு செல்லும் தமிழக வியாபாரிகள் மற்றும் இளைஞர்கள் அதிகம் இந்த ரயிலை தான் பெரி தும் நம்பி உள்ளனர். இரண்டு மாநிலங்களுக்கு இடையே இணைப்புத் தூணாய் இயக்கப்படும் இந்த ரயில்,  தற்சமயம் மோசமான, பாடாவதி யான பெட்டிகளுடன், இயக்கப்பட்டு வருவதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து கேரளாவில் இருந்து நெல்லை க்கு முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணம் செய்த ரயில் பயணிகள் கூறும் போது, பாலக் காட்டில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு அதிகாலை 4 மணிக்கு வந்து செல்லும் இந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது பாடாவதியான பெட்டிகளை கொண்டு இயக்கப் பட்டு வருவதால், பயணிகளுக்கு பல்வேறு இடை யூறுகள், இன்னல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த ரயிலில் உள்ள ஜன்னலோர கம்பிகள் துருப்பிடித்து காணப்படுவதால், அதில் கை வைக்கும் போது  சிறு சிறு சிராய்ப்புகளும், காயங்களும் ஏற்படுகின் றன. இதனால் சிறு குழந்தைகள் முதல் பெரிய வர்கள் முதல் கடும் அவதிப்படுகின்றனர். எனவே ரயில்வே நிர்வாகம் இந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள பாடாவதியான பெட்டிகளை நீக்கி விட்டு, நல்ல நிலையில் உள்ள ரயில் பெட்டிகளை இணைத்து இயக்க  வேண்டும்

என்று  வலியுறுத்தியுள்ளனர். தூத்துக்குடி வரை நீடிப்பும் எதிர்பார்ப்பும் விரைவில் இந்த ரயிலானது மணியாச்சி வழியாக தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்ட உள்ளதாக, தூத்துக்குடி பகுதியில் சனிக்கிழமை ஆய்வு நடத்திய, மதுரை ரயில்வே கோட்ட மேலா ளர் தெரிவித்துள்ளார். இதனால் தென்காசி மாவட்ட மக்களுக்கு தூத்துக்குடி செல்வதற்கு, முதன்முறையாக நேரடி ரயில் சேவை கிடைத்துள்ளது என்பதால் இப்பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை ரயில்வே கோட்டத்தின் கீழ் இயங்கும் இந்த பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஐசிஎப் பெட்டிகளை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக எல்எச்பி கோச்சுகளை கொண்டு இயக்குவதற்கு, மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் ரயில்வே வாரி யத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்பது, நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட ரயில் பயணி கள் சங்கத்தினரின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் 72 கிலோமீட்டர் தூரமுடைய தென்காசி - திருநெல்வேலியை, கடந்த 16ஆம்  தேதி அன்று அதிகாலையில், வெறும் 63 நிமிடங்க ளில் கடந்து, செங்கோட்டை - தாம்பரம் (20684) சூப்பர் பாஸ்ட் ரயிலின் வேகத்தை முறியடித்து, வரலாற்று சாதனை படைத்துள்ளது, நமது. “பால ருவி எக்ஸ்பிரஸ்” ரயில் சேவை என்பது குறிப் பிடத்தக்கது.