புதுக்கோட்டை, டிச.1- புதுக்கோட்டையிலுள்ள தனியார் பள்ளி யில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி யிடம் அவரது ஆசிரியர் சண்முகநாதன்(52) செல்போனில் தகாத வகையில் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்திடம் புகார் அளித்தனர். இதன் தொடர்ச்சியாக அனைத்து மகளிர் காவல் நிலைய போலீ சார் செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டப் பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்து சண்முக நாதனை கடந்த செப். 23 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். தனக்கு பிணை வழங்கக் கோரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் சண்முகநாதன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சத்யா கடும் நிபந்தனைகளை விதித்து அவருக்கு பிணை வழங்கினார். அதில், ரத்த பந்தம் கொண்ட இருவர் ஜாமீன் பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டும். ரூ.25 லட்சத்தை வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தி அதன் ரசீதினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். பிணை பெற்று சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு, தினமும் காலை 10.30 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கும் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் ஆகிய நிபந்தனைகளை நீதிபதி ஆர்.சத்யா தனது தீர்ப்பில் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.