districts

திருச்சி முக்கிய செய்திகள்

பயணியர் நிழற்குடைகளை பழுது பார்க்க கோரிக்கை

பாபநாசம், ஜுன் 17 - பாபநாசம் - சாலியமங்கலம் சாலையில் பல பயணியர் நிழற்குடைகள் பழுதடைந்து, பயனற்ற நிலையில் இருப்பது குறித்தும், கரம்பத்தூரில் பயணியர் நிழற்குடையைச் சுற்றி செடிகள் வளர்ந்திருப்பது குறித்தும் தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. 

இதையடுத்து கரம்பத்தூர் பயணியர் நிழற்குடையில் வளர்ந்திருந்த செடிகள் அகற்றப்பட்டன.  இதேபோன்று கரம்பத்தூரில் பழுதடைந்த நிலையில் உள்ள நிழற்குடைகளை பழுது பார்ப்பதுடன், பாபநாசம் - சாலியமங்கலம் சாலையில் பழுதடைந்த நிலையில் மக்கள் பயன்பாட்டில் உள்ள பயணியர் நிழற்குடைகளையும் பழுது பார்க்க வேண்டும். மக்கள் பயன்பாட்டில் இல்லாத பயணியர் நிழற்குடைகளை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பேருந்து நிறுத்தத்தில் மின் வாரிய அதிகாரியிடம் 9 பவுன் நகைகள் திருட்டு

திருச்சிராப்பள்ளி, ஜூன் 17- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி இரண்டாவது தெரு அக்ரகாரத்தைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் (59).  இவர் தமிழ்நாடு அரசு மின்வாரியத்தில் மேற்பார்வை யாளராக  பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி, மகளுடன்  நகை எடுப்பதற்காக திருச்சி கடை வீதிக்கு வந்தார்.

திருச்சி கடைவீதியில் நகை வாங்கிவிட்டு, மூன்று பேரும் திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை பேருந்து நிறுத் தத்தில், தஞ்சாவூர் பேருந்து ஏறுவதற்காக நின்றனர். அப்போது அவரது கைப்பையை சோதித்துப் பார்த்த போது செயின், ஆரம் உள்பட 9 பவுன் தங்க நகை களை காணவில்லை. உடனே இதுகுறித்து ராமசுப்பிரமணி யன் அரியமங்கலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்  பேரில் ஆய்வாளர் விஜயலட்சுமி வழக்குப் பதிந்து விசா ரணை நடத்தி வருகிறார்.

சிறுவர்களுக்கு போதை  மாத்திரை விற்றவர் கைது

திருச்சிராப்பள்ளி, ஜூன் 17 - திருச்சி பாலக்கரை பகுதியில் சிறுவர்கள் மற்றும்  இளைஞர்களுக்கு போதை மாத்திரைகள் விற்கப்படுவ தாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து உதவி  ஆய்வாளர் அலாவுதீன், தலைமைக் காவலர் கார்த்திக் தலைமையிலான போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். 

இந்நிலையில் குட்ஷெட் ரோடு கருமாரியம்மன் கோவில் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்ற மூன்று வாலிபர்களை  பிடிக்க முயன்றதில், இருவர் தப்பி ஓடிவிட்டனர். ஒரு வரை பிடித்து விசாரித்ததில், அவர்கள் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்க கூடிய போதை மாத்திரைகளை விற்றது தெரிய வந்தது. 

விசாரணையில் அவர் முதலியார் சத்திரம் பகுதி யைச் சேர்ந்த சையது முஸ்தபா என தெரிந்தது. அவரிடம்  இருந்து போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  மேலும் தப்பி ஓடிய பிள்ளை மாநகரைச் சேர்ந்த அஜித்,  அல்லா பிச்சை ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.

போலி பாஸ்போர்ட்டில்
மலேசியாவில் இருந்து 
திருச்சி வந்த 2 பேர் கைது

திருச்சிராப்பள்ளி, ஜூன் 17- மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி  வந்தது. இதில் வரும் பயணிகள் திருச்சி சர்வதேச விமான  நிலையத்தில் ஐந்தாவது கவுண்டர் வழியாக வந்து கொண் டிருந்தனர். அப்போது முகேஷ் ராம் கௌதம் தலைமையி லான இமிகிரேஷன் அதிகாரிகள் பயணிகளின் உடமை கள் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை பரிசோதித்தனர். 

அப்போது மலேசியாவில் இருந்து வந்த இராம நாதபுரம் மாவட்டம் சித்தர்கோட்டை பகுதியைச் சேர்ந்த சையது கமல் (62) என்பவரின் பாஸ்போர்ட்டை சோதனை யிட்டனர். அதில் போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட்  பெற்றது தெரிய வந்தது. இதில் அப்பாவின் பெயர்,  முகவரி, பிறந்த தேதி ஆகியவை தவறாக குறிப்பிடப் பட்டது தெரிய வந்தது. உடனே சையது கமலை இமிகி ரேஷன் அதிகாரிகள் ஏர்போர்ட் காவல் துறையில் ஒப்ப டைத்தனர். 
ஏர்போர்ட் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, கைது  செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் திருச்சிக்கு வந்த நாகை மாவட்டம் குத்தாலம் பகுதியைச் சேர்ந்த முகமது பைசல் என்பவரை யும் ஏர்போர்ட் காவல் துறையினர் கைது செய்தனர்.

வாலிபர் சங்க திருவாரூர்
ஒன்றியக் குழு பேரவை

திருவாரூர், ஜுன் 17 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவாரூர் ஒன்றியக் குழு சிறப்பு பேரவை கூட்டம் கட்சியின் மாவட்டக்  குழு அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேரவைக்கு ஒன்றியத் தலைவர் கே.சதீஷ் தலைமை வகித்தார். ஜெ.வானதீபன் வரவேற்றார்.

மாவட்டப் பொரு ளாளர் எம்.டி.கேசவராஜ் துவக்க உரையாற்றினார். புதிய நிர்வாகிகளை அறிவித்து மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேல வன் நிறைவுரையாற்றினார். 

13 பேர் கொண்ட ஒன்றிய குழுவிற்கு தலைவராக கே.கலை வாணன், செயலாளராக கே.இளையராஜா, பொருளாளராக கே.சதீஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டக் குழு  உறுப்பினர் கே.எஸ்.கோசிமணி மற்றும் முன்னாள் மாவட்ட  நிர்வாகி பி.ஆர்.எஸ்.சுந்தரையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;