districts

நல்லாடை பள்ளியில் அறிவியல் திருவிழா

மயிலாடுதுறை, மே 22-

   மயிலாடுதுறை மாவட்டம் நல்லாடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா நடைபெற்றது.  

   நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை காவேரி  தலைமை வகித்தார். ஆசிரியர் கள் கண்ணகி, ராமதுரை ஆகி யோர் வரவேற்றனர்.

    இதில், முன்னாள் எம்எல்ஏ  அருள்செல்வம், உயர்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக  தலைவர் ராமு, ஊராட்சி மன்ற  தலைவர் காவேரி ஜெயச்சந்தி ரன், தொழிலதிபர் கருணாநிதி வைத்தியநாதன், முன்னாள் மாணவர் அம்பிகாபதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் துர்கா தேவி, வானவில் மன்ற பொறுப்பாளர் குணசீலன் மற்றும்  பெற்றோர்கள், மாணவ மாணவி கள் கலந்து கொண்டனர்.  

   வானவில் மன்ற கருத்தாளர் கள், இல்லம் தேடி கல்வி தன் னார்வலர்கள் குழந்தை களுக்கு கணித, அறிவியல் பரி சோதனைகளை கற்று கொடுத் தனர். மேற்பார்வையிட்டார். ஆசிரியை கண்ணகி நன்றி கூறினார்.