districts

img

அசோக சக்ரா போட்டி தேர்வு மையம் தொடக்க விழா

திருத்துறைப்பூண்டி, டிச.12-  திருத்துறைப்பூண்டி அண்ணா சிலை அருகில் அசோக சக்ரா போட்டி தேர்வு மையம் தொடக்க விழா நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு நகர் மன்ற முன்னாள் தலைவர்  பாண்டியன் தலைமை வகித்தார். திருத்துறைப் பூண்டி ஒன்றிய சேர்மன் பாஸ்கர், திருவாரூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் குழு உறுப்பினர் பொறியாளர் செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  பாரதமாதா சேவை நிறுவனங்களின் நிறுவனர் எடையூர் மணிமாறன் வரவேற்றார். அசோகச் சக்ரா போட்டி தேர்வு மையத்தை திருத்துறைபூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தொடங்கி வைத்தார்.  பின்னர் அவர் பேசும்பொழுது, ‘‘விவசாய பகுதியான திருத்துறைப்பூண்டியில் அசோகச் சக்ரா போன்ற போட்டித் தேர்வு மையங்கள் தொடங்குவதன் மூலம் ஏழை, எளிய மாண வர்கள் அரசு வேலை வாய்ப்பினை பெறுகின்ற தகுதியை அடைகின்றனர்.  மிகவும் பின் தங்கி இருக்கின்ற இந்த பகுதி யிலிருந்து ஒரு மாணவன் அரசு நடத்துகின்ற போட்டித் தேர்வில் வெற்றி பெற்றால் ஒரு குடும்பம் மட்டும் அல்லாமல் சிறந்த சமுதா யம் உருவாவதற்கு நல்ல சூழலை அந்த மாணவன் ஏற்படுத்துவார்.  இதுபோன்ற நல்ல பயிற்சி நிலையங்கள் மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டு மையங்க ளாக உருவாக வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.  இதில், இந்திய செஞ்சிலுவைச் சங்க கிளை தலைவர் சிவா சண்முகவடிவேல், வழக்க றிஞர் சங்கத் தலைவர் வக்கீல் அருட்செல்வன், தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் வக்கீல் நாகராஜன், ரோட்டரி சங்க தலைவர் காளிதாஸ் ,ஜேசிஸ் சங்கத் தலைவர் செந்தில் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் எடையூர் ஒன்றிய கவுன்சிலர் துரையரசன், திருத்துறைப்பூண்டி காவல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, அகில இந்திய கட்டுநர் சங்க தலைவர் துரை ராயப்பன் ,ஜேசி சங்க முன்னாள் தலைவர் ராஜ் நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியினை நூலகர் ஆசைத்தம்பி தொகுத்து வழங்கினார். அசோக சக்ரா போட்டித் தேர்வு மைய இயக்குநர் பொறியாளர் இளஞ்சேரலாதன் நன்றி கூறினார்.

;