அடிக்கல் நாட்டு விழா
பாபநாசம், மார்ச் 15 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி, வடக்கு வீதியில் மூலதன மானிய நிதி திட்டத்தின்கீழ் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில், நவீன மீன் இறைச்சிக் கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடந்தது. பாபநாசம் பேரூ ராட்சித் தலைவர் பூங் குழலி, செயல் அலுவலர் ரவிஷங்கர், பேரூராட்சி துணைத் தலைவர் பூபதி ராஜா, அரசு வழக்கறிஞர் வெற்றிச்செல்வன், கவுன் சிலர்கள் துரைமுருகன், பிரேம்நாத் பைரன், ஜாபர் அலி, பாலகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் பரம சிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோபுராஜபுரம் ஊராட்சி யில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.29.37 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடந்தது. கோபுராஜபுரம் ஊராட்சித் தலைவர் கண்ணன், பாப நாசம் பிடிஓ-க்கள் சிவக் குமார், சுதா, ஒன்றியக் கவுன் சிலர் அமுதா, வி.ஏ.ஓ பழனிசாமி, ஊராட்சி துணைத் தலைவர், உறுப் பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
பள்ளி ஆண்டு விழா
தஞ்சாவூர், மார்ச் 15- தஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி சிந்தாமணிக் குடியிருப்பு எதிரில் உள்ள நியூவிஷன் மழலையர் மற்றும் தொ டக்கப் பள்ளியின் 20 ஆவது ஆண்டு விழா பள்ளி தாளாளர் ரமணிபாய் அருள் ராஜ் தலைமையில் நடை பெற்றது. சிறப்பு விருந்தினராக, தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளு வன், பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் உதயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக பள்ளி ஆசி ரியை லலிதா வரவேற்றார். ஆசிரியை சரஸ்வதி நன்றி கூறினார். பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
குளத்தில் மூழ்கி இளைஞர் பலி
தஞ்சாவூர், மார்ச் 15- தஞ்சாவூர் மோத்திரப் பச்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் கண்ணா (27), கோரிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (25). இவர்கள் இரு வரும் கடந்த மார்ச் 13 அன்று ஜல்லிக்கட்டு காளையை குளிப்பாட்டு வதற்காக கோரிக்குளம் பகுதியில் உள்ள ஒரு குளத்துக்கு சென்றனர். குளத்துக்குள் இறங்கி ஜல்லிக்கட்டு காளையை முகேஷ் கண்ணா குளிப் பாட்டி கொண்டிருந்தார். அப்போது குளத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல், அப்பகுதியில் முகேஷ் கண்ணா சிக்கித் தவித்தார். இதை பார்த்த அஜித் கூச்ச லிட்ட நிலையில், உடனே அருகிலிருந்த பொது மக்கள் வந்து முகேஷ் கண்ணாவை மீட்டு கரைக்கு கொண்டு வந்த னர். அவரை சிகிச்சைக் காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முகேஷ் கண்ணா வியாழக் கிழமை உயிரிழந்தார். இது குறித்து தஞ்சாவூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இ-சேவை மையங்களில் எல்எல்ஆர் பெறலாம்
கரூர், மார்ச் 15 - இனி வாகனங்களை ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் (LLR) பெறுவதற்கு இ- சேவை மையங்கள் மூலமாகவும் விண் ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம் (LLR) பெற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளையும், இடைத்தரகர் களையும், தனியார் இணைய சேவைகளை யும் பொதுமக்கள் அணுக வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தேவையற்ற செலவு ஏற்படுகிறது. மேலும் இந்த முறையில் வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் உள்ளது. இந்த சேவைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் அருகாமையில் உள்ள நகரங்களுக்கு வர வேண்டிய நிலை உள்ளது. இதனைத் தவிர்ப்பதற்காகவும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே இந்த சேவையை கொண்டு சேர்ப்பதற்கும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதனடிப்படையில், மாநிலம் முழுவதும் உள்ள 55,000-க்கும் அதிகமான இ-சேவை மையங்கள் மூலம் வாகனங்கள் ஓட்டுவ தற்கான பழகுநர் உரிமம் (LLR) பெற விண்ணப்பிக்கும் முறை 13.3.2024 முதல் நடை முறைக்கு வந்துள்ளது. இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்க ளுக்கு அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும், இனி வாகனங்கள் ஓட்டு வதற்கான பழகுநர் உரிமம் (LLR) பெற விண்ணப்பிக்கலாம். இ-சேவை மையங்கள் மூலம் இந்த சேவையைப் பெறுவதற்கு, பொதுமக்கள் கூடுதலாக இ-சேவை மையத்திற்கு சேவைக் கட்டணமாக ரூ.60 செலுத்த வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்ட LLR–ஐ வழக்கம் போல விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தொடர்ந்து மோட்டார் வாகனத் துறை மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய இதர சேவை களையும் (Driving License, Permit, உரிமை மாற்றம் உள்ளிட்ட) இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.
சிஏஏவை எதிர்த்து விசிக ஆர்ப்பாட்டம்
திருவாரூர், மார்ச் 15 - குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அமல் படுத்தியுள்ள ஒன்றிய பாஜக அரசை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியின் திரு வாரூர் மாவட்டக் குழு சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மைய மாவட்டச் செய லாளர் தங்க. தமிழ்ச்செல் வன், வடக்கு மாவட்டச் செய லாளர் தமிழ்ஒவியா, தெற்கு மாவட்டச் செயலாளர் வெற்றி ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்மண் பொறுப்பு ஆசிரியரும், எழுத் தாளர் பூவிழியன் பாசிச மோடி அரசை கண்டித்தும் உரையாற்றினார்.
கணக்கெடுப்பிற்கு ஒத்துழைக்க ஆட்சியர் வேண்டுகோள்
திருச்சிராப்பள்ளி, மார்ச் 15- திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் திருச்சி ராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புதிரை வண்ணார் மக்களின் கல்வி, சமூக பொருளாதார நிலை பற்றிய அடிப்படை கணக்கெடுப்பு இபோஸ் நிறுவனத் தின் மூலம் நடைபெற உள்ளது. புதிரை வண்ணார் நலவாரிய உறுப்பினர்கள், உள்ளூர் சமூகத்தினர் மற்றும் அரசு பிரதிநிதிகளு டன் ஆலோசனை நடத்தி இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பு குழு ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு குடும்பத் திற்கும் நேரடியாக சென்று கணக்கெடுப்பை நடத்தி அவர்களிடம் தகவல்களை பெற்று ஆய்வு செய்யும். மேற்கண்ட கணக்கெடுப்பு பணிக்கு நியமனம் செய்யப்பட்ட அலுவலர் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு குடும்பத்திலும் கணக்கெடுக்க வரும் போது, புதிரை வண்ணார் இன மக்கள் உரிய தக வல்களை அளித்து கணக்கெடுப்பு குழுவிற்கு ஒத்து ழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
சிறைவாசிகளின் நலனுக்காக சிறைப் பார்வையாளர்கள் நியமனம்
புதுக்கோட்டை, மார்ச் 15 - புதுக்கோட்டை மாவட்ட சிறை மற்றும் பாஸ்டல் பள்ளியிலுள்ள சிறைவாசிகளின் நலன்களை நேரில் சென்று பார்வையிடுவதற்காக 6 பேர் கொண்ட பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநில சிறைத் துறை இயக்குநரகம் வெளி யிட்டுள்ளது. மருத்துவர் கே.எச்.சலீம், இயற்கை விவசாயி ஜி.எஸ்.தனபதி, ஓய்வுபெற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி, வைரவன், கோவிந்தராஜ், பாலகிருஷ்ணன் ஆகியோர் இந்தப் பார்வையாளர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். 3 ஆண்டுகளுக்கு இவர்கள் இந்தப் பொறுப்பில் இருப்பார்கள். சிறை வளாகத்துக்குள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் சென்ற அனைத்து சிறைவாசி களையும் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறி யவும், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து பார்வையிடவும், தாங்கள் பார்த்த குறைகளை அங்குள்ள பார்வையாளர் குறிப்பேட்டில் எழுதவும் வேண்டும். பார்வையாளர்கள் எழுதியுள்ள குறிப்புகளுக்கு உரிய பதிலை சிறைக் கண்காணிப்பாளர்கள் எழுதி, அதுகுறித்த அறிக்கையை சிறைத்துறை தலைமையிடத் துக்கு தெரிவிக்க வேண்டும் என சிறைத்துறை விதி களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுரங்க பாதுகாப்பு வார விழா
அரியலூர், மார்ச் 15 - அரியலூரில் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேசன், ஒன்றிய அரசின் இந்திய பீரோ ஆப் மைன்ஸ் சார்பில் 31 ஆவது சுரங்க சுற்றுச்சூழல் மற்றும் தாது பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. ஒன்றிய அரசின் இந்திய பீரோ ஆப் மைன்ஸ் உயர் அதிகாரிகள் பெங்களூர் ஜெயகிருஷ்ண பாபு, சென்னை சேத்தி, தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேசன் மேலாண் இயக்குநர் கண்ணன் உள்ளிட்டோர் பேசினர். பின்னர், சிறந்த சுரங்கங்களுக்கு பரிசுகளும், பல்வேறு பிரிவு களின்கீழ் சிறந்து விளங்கிய தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஆனந்தவாடி சுண்ணாம்புக்கல் சுரங்கத் துக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் வழங்கினர். இந்த விழாவில், மாநிலத்தில் உள்ள 41 சுரங்கங் கள், 3 பிரிவாக பிரிக்கப்பட்டு பல்வேறு பிரிவுகளின்கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அரசு நகர் பள்ளி யின் சார்பாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன
பேருந்தில் நகை திருட்டு
தஞ்சாவூர், மார்ச் 15- பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் 23 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். தஞ்சாவூர் விளார் ரோடு ஜெகநாதன் நகரைச் சேர்ந்த வர் தம்பிதுரை. இவரது மனைவி மல்லிகா (64) வியாழக் கிழமை தஞ்சாவூர் மணிமண்டபம் அருகிலுள்ள கூட்டு றவு நகர வங்கியில் லாக்கரில் இருந்த தனது வளையல், மோதிரம், நெக்லஸ், தோடு, செயின் உள்பட 23 பவுன் நகை களை எடுத்து அதனை ஒரு பையில் வைத்தார். பின்னர் நகைகளுடன் அங்கிருந்து வீட்டுக்குச் செல்ல மணிமண்டபம் பேருந்து நிறுத்தத்திலிருந்து நகரப் பேருந்தில் ஏறினார். பின்பு மேரீஸ் கார்னர் பகுதியில் இறங்கிய போது, தான் வைத்திருந்த பைக்குள் இருந்த 23 பவுன் நகைகள் அடங்கிய மற்றொரு பை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கூட்ட நெரிசலை பயன் படுத்தி மர்ம நபர்கள் நகையை திருடியுள்ளனர். இதுகுறித்து அவர் தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாக் ஜலசந்தி கடல் பகுதியில் தங்குகடல் மீன் பிடிப்பதை தடை செய்க! ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், மார்ச் 15- பாக் ஜலசந்தி கடல் பகுதியில், நாகை, காரைக்கால் பகுதி மீனவர்கள் தங்கு கடல் மீன் பிடிப்பதை தடை செய்யக் கோரி, தஞ்சாவூர் மாவட்ட நாட்டுப் படகு மீனவர் சங்கம் (ஏஐடியுசி) சார்பில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நாட்டுப் படகு மீனவர் சங்க மாவட்டச் செயலா ளர் காளிதாஸ் தலைமை வகித்தார். நாகப்பட்டினம் கீச்சாங்குப்பம் விசைப்படகு மீன வர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித் தும், பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பாக் ஜலசந்தி கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலை, அரி வலை பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். அதனை பயன்படுத்தும் விசைப்படகுகளை பறி முதல் செய்ய வேண்டும். நாகை, காரைக்கால் விசைப் படகு மீனவர்கள், தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் தங்கு கடல் மீன் பிடிப்பதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை பலமுறை வலியுறுத்தியும், இது வரை நடவடிக்கை எடுக்காத மீன்துறை, மாவட்ட நிர்வா கத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏஐடியுசி நாட்டுப் படகு மீனவர் சங்க மாநில பொதுச் செயலாளர் சின்னத்தம்பி, ஏஐடியுசி மாநிலச் செயலாளர் தில்லைவனம், தஞ்சை மாவட்டத் தலைவர் சேவையா, கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பேராவூரணியில் நாளை இலவச கண் பரிசோதனை முகாம்
தஞ்சாவூர், மார்ச் 15- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஸ்ரீவிநாயகா திருமண மஹாலில் மார்ச் 17 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. பேராவூரணி லயன்ஸ் சங்கம், ஸ்ரீ விநாயகா ஜுவல்லர்ஸ், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் இணைந்து ஞாயி றன்று, முழுமையான இலவச கண் பரிசோதனை முகாமை நடத்த உள்ளனர். முகாமில், கண்புரை நோய், சர்க்கரை நோய், கண் நீர் அழுத்த நோய், குழந்தைகளுக்கான கண் நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து உள்ளிட்ட அனைத்து வகையான கண் சம்பந்தப்பட்ட குறைபாடுகளுக்கும் மருத்துவர்கள் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்க உள்ளனர். பொதுமக்கள் முகாமிற்கு வரும் போது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தொலைபேசி எண் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என லயன்ஸ் சங்கத் தலைவர் சிவநாதன் தெரிவித்தார்.
தொழில்நுட்பங்களை விளக்கி தெருமுனை கூட்டங்கள்
தஞ்சாவூர், மார்ச் 15- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் வேளாண் துறை, அட்மா திட்டத்தின்கீழ் கலாச்சதா தெரு முனை கூட்டங்கள் மூலமாக தொழில் நுட்பங்களை பரப்பு தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) அப்சரா துவக்கி வைத்தார். நிகழ்ச்சி பட்டுக் கோட்டை வட்டாரத்திற்குட்பட்ட ஆலடிக்குமுளை, கரம்பயம், எட்டுப்புளிக்காடு, திட்டக்குடி, சூரப்பள்ளம், துவரங்குறிச்சி, தம்பிக்கோட்டை வடகாடு, தாமரங் கோட்டை, அதிராம்பட்டினம், முதல்சேரி உள்ளிட்ட பல கிராமங்களில் நடைபெற்றது. இதில் வேளாண் தொழில்நுட்பக் கருத்துகள், கலை நிகழ்ச்சி வாயிலாக விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப் பட்டது. ஆர்.வி.எஸ் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள், விவசாயிகளிடம் கிசான் அட்டை பெறுவது, மண் மாதிரி சேகரிப்பு மற்றும் உழவன் செயலி பதிவேற்றம் செய்வது தொடர்பாக துண்டு பிரசுரங்களை வழங்கி அவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
திருச்சியில் 3 நாள் யூடியூப் சேனல் உருவாக்குதல் பயிற்சி
திருச்சிராப்பள்ளி, மார்ச் 15- யூடியூப் சேனல் உருவாக்குதல், சேனலை சந்தைப்படுத்தல் குறித்த 3 நாள் பயிற்சி திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறு வனம் சார்பில், உங்களது சொந்த யூடியூப் சேனலை உருவாக்குதல் மற்றும் இணைய தளத்தில் யூடியூப் சேனலை பயன்படுத்தி உங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தல் குறித்த பயிற்சி மார்ச் 28 முதல் 30 வரை, காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை திருச்சி மாவட்ட ஆட்சியர் கலந்தாய்வு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் தொழில் முனைவோர், யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி, வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உரு வாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையா ளர் நெட்வொர்க்கை எவ்வாறு அதிகரிப் பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு, ஆன்-லைன் மார்க்கெட்டிங் மற்றும் விதிகள் ஆகியவற்றை விரிவாக விளக்கிடும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட, குறைந்தபட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு முடித்த ஆர்வ முள்ள தொழில் முனைவோர் (ஆண்/பெண்) விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கட்ட ணம் ரூ.5,000. பயிற்சியில் சேர விரும்பு வோர், இப்பயிற்சிக்கான கட்டணத்தை செலுத்தி தங்கள் பெயரை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை www.editn.in என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலு வலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி - தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032 மற்றும் தொலைபேசி எண்கள். 044- 22252081/ 22252082, 8668102600 / 8668100181 / 7010143022 ஆகும். பயிற்சியில் பங்குபெற முன் பதிவு அவசி யமாகும். பயிற்சியில் கலந்து கொள்பவர் களுக்கு அரசின் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரஷர் குவாரியை சட்ட விரோதமாக இயக்க அனுமதிக்க மாட்டோம்! மறியல் போராட்டத்தின் போது அதிகாரிகள் உறுதி
புதுக்கோட்டை, மார்ச் 15 - சட்ட விரோதமாக கிரஷர் குவாரியை இயக்க அனுமதிக்க மாட்டோம் என்ற அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நார்த்தாமலையில் வெள்ளி யன்று நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் வத்தனா குறிச்சி ஊராட்சியில் வெவ்வயல் பட்டி மற்றும் வத்தனாகுறிச்சி ஆதிதிரா விடர் கூட்டு குடியிருப்பு அருகில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் கிரஷர், தார் பிளாண்டுடன் கூடிய கல் குவாரி செயல்பட்டு வருகிறது. இத னால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பல்வேறு வகையான நோய்கள் வருவ தாக அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியுடன் இணைந்து தொடர்ச்சி யாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், முறையாக அனுமதி பெறாமல் தொடர்ச்சியாக மேற்படி கல் குவாரி இயங்கி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். போராட் டங்களைத் தொடர்ந்து அதிகாரிகள் முன் னிலையில் பல கட்டப் போராட்டங் களை நடத்தியும் பலனில்லாததால் வெள்ளிக்கிழமை மீண்டும் சாலை மறி யல் போராட்டத்திற்கு அப்பகுதி மக்கள் தயாராகினர். புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நார்த்தாமலை என்ற இடத்தில் பாதிக்கப் பட்ட பகுதி மக்களும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினரும் சாலை மறியல் போராட்டத்திற்குத் தயாராகினர். இதனைத் தொடர்ந்து போராட்டம் நடந்த இடத்திற்கு வந்த குளத்தூர் வட்டாட்சியர் கவியரசு, கீரனூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் செங்குட்டு வேலன், காவல் ஆய்வாளர் சிட்டிபாபு, மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரி செல்வ குமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி. சலோமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்செல்வன், பேரூராட்சி கவுன்சிலர் மகாலெட்சுமி, விதொச ஒன்றியச் செயலாளர் பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குவாரி முறையாக அனுமதி பெறா மலும், சட்ட விரோதமாகவும் செயல் பட்டால் தொடர்ந்து குவாரியை இயக்க அனுமதிக்க மாட்டோம். உரிய ஆய்வு செய்து நிச்சயமாக நடவடிக்கை எடுப் போம் என அதிகாரிகள் உறுதி அளித்த னர். இதைத் தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை, மார்ச 15 - பெண் ஊழியரைத் தாக்கிய அதிகாரியைக் கண்டித்த அங்கன்வாடி ஊழியர்கள் புதுக்கோட்டை ஆட்சியர் அலுவல கம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டம் மேலப்பட்டு அங்கன்வாடி திட்டப் பணியாளராக வேலை செய்பவர் செல்வி. இந்த மையத்தை சில தினங்களுக்கு முன்பாக பார்வையிட வந்த மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்) புவனேஸ்வரி வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்கத்தோடு, தேவையற்ற காரணங்களைக் கூறி தரக்குறைவாகத் திட்டியதோடு, கையால் அடித்துள்ளதாக பணியாளர் செல்வி குற்றம் சாட்டியுள் ளார். மாவட்டத் திட்ட அலுவலரின் இத்தகைய ஊழி யர் விரோத, அராஜகப் போக்கைக் கண்டித்து அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்சங்கத்தின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். விஜயலெட்சுமி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் எஸ்.தேவமணி, மாவட்டச் செயலாளர் ஏ.சி.செல்வி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.எம்.ரேவதி, மாவட்ட துணைத் தலைவர்கள் எம்.முத்துச் செல்வி, லதா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாநிலச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் உரையாற்றினார். சிஐ டியு மாவட்டப் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், துணைச் செயலாளர் கே.ரெத்தினவேலு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட அங்கன்வாடிப் பணியார்கள் பங்கேற்றனர்.