districts

குருவிக்கரம்பை கூட்டுறவு சங்க கடன் தள்ளுபடியில் பாரபட்சம்

தஞ்சாவூர், டிச.4 - குருவிக்கரம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் டி. 1230-ல், பயிர் கடன் தள்ளுபடியில் பார பட்சமான போக்கு நிலவுவதாகவும், நிபந்தனைகளை களைந்து விவசாயி கள் அனைவருக்கும் கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் வீ.கருப்பையா தலை மையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பேராவூரணி வட்டாட்சியர் த.சுகுமாரை சனிக்கிழமை நேரில் சந்தித்து கோரி க்கை மனு அளித்தனர்.  அந்த மனுவில், தஞ்சாவூர் மாவட்டம்  பேராவூரணி வட்டம் குருவிக்கரம்பை கிராமத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்-  டி.1230-ல், வெளியூரில் நிலம் இருப்ப தாக கூறி 36 விவசாயிகளுக்கு கடன்  தள்ளுபடி இல்லை எனக்கூறி அடகு வைத்த நகைகளை தர மறுக்கின்றனர்.  

வெளியூரில் உள்ள நிலங்களுக்கு விவசாயிகளால் என்ஓசி பெற்று தரப் பட்டுள்ளது. மேலும், பல்வேறு புதிய  புதிய நிபந்தனைகளை விதித்து கடன் தள்ளுபடி செய்ய மறுக்கின்றனர். தமிழ கத்தில் எந்த கூட்டுறவு சங்கத்திலும் இல்லாத நடைமுறை குருவிக்கரம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்கத்தில் பின்பற்றப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தள்ளு படி நிவாரணக் கடன் தொகைகளை பெற்று, நகைகளை திருப்பித் தர வேண்டும்.

 உள்ளூர் நிலங்களுக்கான தள்ளுபடி  தொகை ரூ. 9 லட்சத்து 22 ஆயிரத்தை  உடனடியாக அரசு விடுவித்து விவசாயி களுக்கு உதவி செய்ய வேண்டும். விவ சாய நகைக் கடன் பெற்ற விவசாயிகள்  அனைவருக்கும் கடன் வழங்கப்படா மல் உள்ளது. எனவே ஆண்டுக் கணக்கு  முடிவதற்குள் புதிய கடன்களை வழங்க  வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.  அப்போது, சிபிஎம் சேதுபாவா சத்திரம் ஒன்றியச் செயலாளர் ஆர். எம்.வீரப்பெருமாள், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.எஸ். வேலுச்சாமி,  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மணக்காடு செந்தில், மதிமுக அவைத்  தலைவர் கோரா என்ற கோ.ராமசாமி,  வாத்தலைக்காடு விவசாயிகள் அருள் மணி, சிவகுமார், சுந்தரபாண்டியன், சண்முகநாதன், பிரபு, ராமமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;