அறந்தாங்கி, ஜூன் 1- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கல்லூரி கலை அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் (பொ) ச.குமார் தலைமை வகித்தார். டிப்ளமோ சிவில் இன்ஜி னியரிங், டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜி னியரிங். டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், டிப்ளமோ கம்ப்யூ ட்டர் இன்ஜினி யரிங், டிப்ளமோ கமர்சியல் பிராக்டி கல் இன்ஜினியரிங் ஆகிய பாடப் பிரிவு களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் தேர்வு பெற்ற மாணவர் களுக்கு கல்லூரி முதல்வர் (பொ) ச.குமார், சேர்க்கை ஆணை வழங்கினார். அனைத்துத் துறை பேராசிரியர்கள், அலுவலர்கள் உட னிருந்தனர்.