மதுரை, ஜூலை 8-
தமிழக காவல் துறைத் தலைவர் சங்கர்ஜிவால் தலைமையில் மதுரையில் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடை பெற்றது. இதில் மதுரை மாநகர், மதுரை மாவட்டம், விருதுநகர் மாவட்டக் காவல் துறை உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் காவல் துறையினரின் மன அழுத்தத்தைப் போக்குவது, சட்டம் - ஒழுங்குமற்றும் குற்றச் சம்பவங்களைக் கட்டுப் படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க், மதுரை மாநகர் காவல் ஆணையர் கே.எஸ்.நரேந்திரன் நாயர், டிஐஜி ஆர்.பொன்னி, மாவட்டக் காவல்கண்கா ணிப்பாளர் ஆர்.சிவபிரசாத், விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.சீனிவாசபெருமாள் மற்றும் காவல் துறை உதவி மற்றும் துணை ஆணையர் கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் காவல்துறைத் தலைவர் சங்கர் ஜிவால், “காவல் துறையினர் பணியின்போது மன அழுத்தம் இன்றி பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும். மக்கள்அளிக்கும் மனுக்கள் மீது உடனுக் குடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சைபர் கிரைம் குற்றங்களைகூடுதல் கவனத்துடன் கண்காணித்து அது தொடர்பான குற்றங்களைத் தடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
மேலும் அவர் கூறுகையில், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க வேண்டும். பள்ளிக் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பைக் ரேஸில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய காரணங்களோடு விடுமுறை விண்ணப்பிக் கும் காவலர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும். பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் காவ லர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி படுத்த வேண்டுமென அறிவுறுத்தினார்.