கும்பகோணம், அக்.1- விசாலம் குடியிருப்பு பகுதியில் நிலவும் சாதியப் பாகுபாட்டை களைந்து, அனை வருக்கும் சம உரிமை வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா, மாங்குடி கிராமம் பைபாஸ் அருகில் காவிரியின் தென்கரையில், விசாலம் குடி யிருப்பு உள்ளது. இங்கு சுமார் 200 வீடுகள் உள்ளன. இங்கு பிராமணர்களுக்கு மட்டுமே வீடு விற்பனைக்கும், வாடகைக் கும் விடப்படும் என்று நிர்வாகத்தினர் கூறு கின்றனர். கடந்த 5 ஆண்டுகளில், வேறு எந்த சமூகத்தைச் சார்ந்தவருக்கும் இங்கு வீடு கொடுக்கவில்லை. இங்கு பிராமணர்கள் மட்டும் வசிக்கலாம் என்ற சாதியப் பாகு பாட்டை கடைப்பிடித்து, காவிரி ஆற்றை ஆக்கிரமித்து படித்துறைக் கட்டப்பட்டுள் ளது. அதை பிராமணர்கள் மட்டும் பயன் படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டப் படி இது தீண்டாமை குற்றமாகும். விசாலம் குடியிருப்பில் நிலவும் சாதியப் பாகுபாட்டை களைந்திட கோரியும், அனைத்து சாதியினருக்கும் சம உரிமை வழங்கிடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திராவி டர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட முற்போக்கு இயக்கங்கள் சனிக் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநகரச் செயலாளர் பழ.அன்பு மணி தலைமை வகித்தார். திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் நிம்மதி, திரா விட விடுதலைக் கழக மாநிலக் குழு உறுப்பி னர் இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருளரசன், மாமன்ற உறுப்பினர் செல்வம், மாநகரச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் கும்பகோணம் ஒன்றியச் செயலாளர் கணே சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக, கோட்டாட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்.