districts

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை

தஞ்சாவூர், ஜூலை 4-  

    தஞ்சாவூரை அடுத்த திட்டை கீழத்தெருவைச் சேர்ந்த வர் ராஜேந்திரன். இவருடைய மகன் மகேஸ்வரன் (26).  பெயிண்டர் வேலை பார்க்கும் இவர், தஞ்சையில் உள்ள ஒரு  பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியுடன் பழகி  வந்தார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த மாணவியை, திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய் துள்ளார்.

     மாணவியின் பெற்றோர் கூலி வேலைக்குச் சென்று விடுவர் என்பதால் பள்ளி விடுமுறை நாட்களில் மாணவி  வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போதும் மாணவியை  வற்புறுத்தி, மகேஸ்வரன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  

   இதனால் மாணவி கர்ப்பமடைந்த நிலையில், இச்சம்ப வத்தை அறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்த னர். இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகார் செய்ததன் பேரில், அப்போதைய காவல் துறை ஆய்வாளர் கலைவாணி வழக்குப் பதிந்து மகேஸ்வ ரனை கைது செய்து விசாரணை நடத்தினார்.

   இந்த வழக்கு தஞ்சையில் உள்ள போக்சோ நீதிமன்றத்  தில் நடந்து வந்த நிலையில், திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்  பட்டது. இதில், மகேஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்ட னையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி  சுந்தர்ராஜன் தீர்ப்பளித்தார். அபராதம் கட்டத் தவறினால்  மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தும் உத்தர விட்டார்.  மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்  பீடு வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞர் சசிரேகா ஆஜரானார்