புதுக்கோட்டை . மே 21- ஊரக உள்ளாட்சிப் பகுதி கள். பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்று வது தொடர்பாக. மாவட்ட அள விலான கண்காணிப்புக் குழு கூட்டம். மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது: 08.05.2024 அன்று தேதிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி ஊரகப்பகுதி கள்.பேரூராட்சிகள். நகராட்சிப்பகு திகள் மற்றும் நெடுஞ்சாலைப் பகுதிகளில் உள்ள சீமைக்கரு வேல மரங்களை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்திடவும். அவ்விடங்களில் புதிதாக நிழல் தரும் மரங்கள் அல்லது பலன்தரும் மரங்களை நடவு செய்திடவும். தொடர்புடைய அலுவலர்களுக்கு அறி வுரைகள் வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம்- ஆரியூர், அறந்தாங்கி-மூக்குடி. அரிமளம்-கீழப்பணையூர் . ஆவு டையார்கோவில்-பெருநாவலூர். கந்தர்வகோட்டை-பிசானத்தூர். கறம்பக்குடி-மழையூர் .குன்றாண் டார்கோவில்-குளத்தூர். மண மேல்குடி-கோலேந்திரம். பொன்ன மராவதி-கொப்பனாப்பட்டி. புதுக்கோட்டை-குப்பையம்பட்டி. திருமயம்-ஆத்தூர். திருவரங்குளம்-கலங்குடி. விராலிமலை-நீர்பழனி ஆகிய ஊராட்சிகளில் சீமைக் கருவேல மரங்களை அகற்றிட. ஊராட்சி அளவிலான ஒருங்கி ணைப்புக் குழு அமைத்து பணிகளை மேற்கொள்ள தொடர்பு டைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது என்றார். இக்கூட்டத்தில். மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.ரம்யாதேவி. மாவட்டஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன். மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம். இணை இயக்குநர் (வேளாண்மை) பெரியசாமி. உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) எஸ்.ஜி.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.