districts

img

இந்து-முஸ்லிம் மத நல்லிணக்கத்துடன் நடத்தும் திருவிழா: ஏனாதி கிராமத்தில் மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம்

அறந்தாங்கி, மே 30-  புதுக்கோட்டை மாவட்டம்   அறந்தாங்கி அருகே மணமேல்குடி தாலுகாவிற்கு உட்பட்ட ஏனாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் சேக் இஸ்மாயில் ஒலியுல்லா தர்கா இணைந்து மதநல்லிணக்கத்துடன் 36 ஆம் ஆண்டு திருவிழா நடத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது  இந்த போட்டியில் மதுரை, திருச்சி,தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து   100-க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட குதிரைகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாடு, நடுமாடு, கரிச்சான் மாடு, நடுகுதிரை, கரிச்சான் குதிரை என ஜந்து பிரிவுகளாக இந்த போட்டி நடைபெற்றது போட்டியில் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை வென்ற  மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் குதிரையின் உரிமையாளர்களுக்கு 2லட்சத்தி 75ஆயிரம் ரொக்கப்பரிசும் கோப்கைகளும் வழங்கப்பட்டன.. பந்தய நிகழ்ச்சியை சாலையின் இரு புறமும்  ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். மணமேல்குடிபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

;