districts

img

குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை

தஞ்சாவூர், ஜூலை 9-  

    தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி ஊராட்சி ஒன்றிய பகு திக்கு உட்பட குறிச்சி-பாலத் தளி இணைப்பு தார்ச்சாலை, சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு, கடந்த 10 ஆண்டு களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

    தற்போது அந்த சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற வகையில் உள்ளது. இதனால், அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது வயல்களுக்கு இடுபொருட்கள் எடுத்து செல்வ தற்கும், டிராக்டர், அறுவடை இயந்திரங்களை கொண்டு செல்வதற்கும், விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லவும் மிகவும் அவதிப்படுகின்றனர்.

    அத்துடன் சாலைகளில் ஜல்லி கற்கள் பெயர்ந்து இருப்பதால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருவ தோடு, தடுமாறி கீழே விழுந்து காயங்கள் ஏற்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இந்த சாலையானது பிரசித்த  பெற்ற பாலத்தளி துர்க்கையம்மன் கோவிலுக்கு செல்லும்  முக்கிய சாலையாகவும் உள்ளது. உடனே இந்த சாலையை சீர மைத்து, சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற  வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

   இதுகுறித்து குறிச்சி கிராமத்தை சேர்ந்த சுந்தர் கூறு கையில், சாலையை சீரமைக்க கோரி ஓராண்டிற்கு முன்பு அதி காரிகளிடம் கூறப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவ டிக்கையும் இல்லை. பாலத்தளிக்கு செல்லுவதற்கு துறவிக் காடு, புனல்வாசல், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பகுதிகளை  சேர்ந்தவர்கள் இந்த சாலையைத் தான் பயன்படுத்து வார்கள். எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி, சாலையை அகலப் படுத்தி சீரமைக்க வேண்டும் என்றார்.