districts

மஜ்ஸிதுர்  ரஹ்மான் ஜூம்மா பள்ளிவாசலில் ரத்த தான முகாம் நடை பெற்றது

தஞ்சாவூர், ஜூலை 3-  

   தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம்,  ஆவணம் கிளை சார்பாக, ஞாயிற்றுக்கிழமை மஜ்ஸிதுர்  ரஹ்மான் ஜூம்மா பள்ளிவாசலில் ரத்த தான முகாம் நடை பெற்றது. முகாமிற்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலா ளர் அமீர் அப்பாஸ் தலைமை வகித்தார்.  

   சிறப்பு அழைப்பாளர்களாக ஆவணம் ஊராட்சி மன்றத்  தலைவர் வத்சலா முத்துராமன், வட்டார மருத்துவ அலு வலர் எஸ்.அருள், செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகா தார நிலைய மருத்துவர் வி.துரைராஜன் ஆகியோர்  கலந்து கொண்டனர். இம்முகாமில், 28 யூனிட்டுகள்  ரத்தம் சேகரிக்கப்பட்டு, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கிக்கு தானமாக கொடுக்கப் பட்டது. பின்பு, ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்  வழங்கப்பட்டது.