districts

மயான இடத்தை ஆக்கிரமித்த பாஜக பிரமுகர்

பொன்னமராவதி, ஆக.25 -

     புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் தொட் டியம்பட்டி ஊராட்சிக்குட் பட்ட பொன் நகரில் உள்ள  மயான (சுடுகாட்டு) இடத்தை  ஆக்கிரமிப்பு செய்த பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

     இது தொடர்பாக சங்கத் தின் ஒன்றியத் தலைவர் கட்டையாண்டிபட்டி பழனி யப்பன், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவ லர், மாவட்ட ஆட்சியர் ஆகி யோரிடம் அளித்துள்ள  மனுவில் கூறியிருப்ப தாவது:  

    சர்வே எண்.792/1 -க்கு கட்டுப்பட்ட சுடுகாட்டு இடத்தை சிலர் இரவோடு இரவாக ஆக்கிரமிப்பு செய்து வருகிறார்கள். இந்த  மயானமானது இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம் கள் என அனைவரும் பயன் படுத்தக் கூடியது.  

    மேற்கண்ட மயானத்தை சுற்றியுள்ள இடங்களை தனி  நபர்கள் ஆக்கிரமித்து பார திய ஜனதா கட்சியின் கொடியை கட்டியுள்ளனர்.  

      இந்த மயானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங் களை ஆக்கிரமிப்பு செய்த வர்கள் மீது நடவடிக்கை எடுத்து மயானத்தை பாது காக்குமாறு கேட்டுக் கொள் கிறோம்.

     இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.  

     பின்னர், பொன்னமரா வதி வட்டார வளர்ச்சி அலு வலர் வீரய்யனிடம் நேரில்  மனு அளித்தனர். சிபிஎம்  ஒன்றியச் செயலாளர் பக்ரு தீன் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.