districts

700 ஏக்கர் கோவில் நிலம் மீட்பு பொது ஏலம் விடப்பட்டது

தஞ்சாவூர், டிச.1 -  அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 700 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டு பொது ஏலத்தில் விடப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றம், இந்து சமய  அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தையும், புதிதாக அளவீடு  செய்து குத்தகைக்கு விடப்படாத  நிலங்களை கண்டறிந்து சட்ட விதிகளின்படி பொது ஏலத்தில் விட உத்தரவிட்டது.  அதனைத் தொடர்ந்து இந்துசமய அறநிலை யத்துறை ஆணையர், உதவி ஆணையர்  தலைமையில் கோவில் செயல் அலுவலர்,  ஓய்வு பெற்ற நில அளவர் மற்றும் கிராம நிர்வாக  அலுவலர்கள் அடங்கிய குழு நியமிக்கப் பட்டு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப் பட்டது.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாடு வட்டம் சில்லத்துார் கிராமத்தில் அமைந் துள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்த மான சுமார் 700 ஏக்கர் நஞ்சை மற்றும்  புஞ்சை நிலங்களை, கோவில் நிர்வாகம்  புல எண் வாரியாக அளவீடு செய்து நிலங்க ளின் சாகுபடிதாரர்களை கண்டறிந்து விவ ரப்பட்டியில் தயார் செய்து 1,500 லாட்களாக  பிரித்து, அறநிலையத்துறை ஆணையர் குமர குருபரன் உத்தரவின் பெயரில், பரிதியப்பர் கோவில் பாஸ்கரேஸ்வரர் சுவாமி கோவி லில், கடந்த நவ.25, 26 மற்றும் நவ. 29 ஆகிய மூன்று தினங்களில் பொது ஏலம் நடத்தி குத்தகைக்கு விடப்பட்டது. இந்த ஏலத்தில் சில்லத்தூர், பின்னையூர், திருநல்லுார் மற்றும் கிருஷ்ணா புரம் சதுர்காடு ஆகிய கிராமங்களை சேர்ந்த  800-க்கும் அதிகமாக சாகுபடிதாரர்கள்  கலந்து கொண்டு நிலங்களை சாகுபடிக்காக பொது ஏலத்தில் குத்தகைக்கு எடுத்தனர். இதில், அறநிலையத்துறை மண்டல இணை  ஆணையர் தலைமையில், உதவி ஆணையர் சிவராம்குமார், செயல் அலுவலர் ராஜகுரு, ஒரத்தநாடு சரக ஆய்வாளர் புண்ணிய மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடந்தது.

 இதுகுறித்து அறநிலையத்துறையினர் கூறுகையில், இந்து சமய அறநிலையத் துறை கட்டளைகள் சட்டத்தின்படி முறையாக  பொது ஏலம் நடத்தியதால் விவசாயிகள்  சட்டப்பூர்வமாக குத்தகைதாரர்கள் என்ற  அங்கீகாரத்தை பெறுகிறார்கள். இதனால் விவசாயிகள் பயிர்க் காப்பீடு போன்ற அனைத்து பலன்களையும் பெற முடியும்.  இதனால் தற்போது ரூ.25 லட்சம் வருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது. திருக்கோவிலின் கால பூஜைகள் தடையின்றி நடைபெறும்.  கோவில் அர்ச்சகர் உள்ளிட்ட பணியாளர் களுக்கு முறையாக ஊதியம் வழங்க  வழிவகை ஏற்பட்டுள்ளது” என்றனர்.