districts

திருச்சி முக்கிய செய்திகள்

நிதிசார் விழிப்புணர்வு

பாபநாசம், பிப்.3 - தஞ்சாவூர் மாவட்டம்  பாபநாசம் அருகே நெடுந்தெரு சரபோஜி ராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நபார்டு வங்கியில் நிதிசார் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது.  நிகழ்ச்சியில் சங்க  செயலர் கலியமூர்த்தி அறிமுக உரையாற்றி னார். கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி  பாபநாசம் கிளை மேலா ளர் ராஜேஸ்வரி சிறப்பு ரையாற்றினார். இதில், ரெகுநாதபுரத்தில் செயல் படும் 3 மகளிர் குழு விற்கு ரூ.9 லட்சம் கடன்  வழங்கப்பட்டது.

வீட்டுக்குள் புகுந்த  பாம்பு மீட்பு

திருச்சிராப்பள்ளி, பிப்.3- திருச்சி விமான நிலை யம் காமராஜ் நகர் அந் தோணியார் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த வர் ராஜேஸ்வரி. இவர் சனிக்கிழமை காலை சமையலறையில் வேலை  செய்து கொண்டிருந்த போது, வீட்டில் மேசை மீது இருந்த பொருட் கள் திடீரென தவறி விழுந்தன. சத்தம் கேட்டு  பார்த்த போது, மேசை மீது சுமார் 7 அடி நீள முள்ள பாம்பு ஒன்று  நெளிந்து கொண்டிருந் தது.  அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த அவர், கதவை  பூட்டினார். அக்கம்பக்கத் தினர் வந்து பாம்பை தேடிய போது, எங்கோ பதுங்கிக் கொண்டது. பின்னர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல்  கொடுத்தார். இதனை யடுத்து விரைந்து வந்த திருச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் சத்தி யவர்தன் தலைமையி லான வீரர்கள், அரை மணிநேரம் போராடி வீட்டுக்குள் இருந்த பாம்பை மீட்டனர். பின்னர் பாம்பு வனப் பகுதியில் விடப்பட்டது. 

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தஞ்சாவூர், பிப்.3-  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம், கருப்பூர் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட வரு வாய் அலுவலர் தெ. தியாகராஜன் தலைமை யில் சனிக்கிழமை நடை பெற்றது. திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். முகாமில், 108 பயனாளி களுக்கு ரூ.1.84 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம் உரை யாற்றினார்.

இதய நோய் பரிசோதனை முகாம்

தஞ்சாவூர், பிப்.3-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளியில், பெரம்ப லூர் மாவட்டம் சிறுவாச்சூர் தனலட்சுமி சீனி வாசன் மருத்துவமனை, பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம், சபரி ப்ளெக்ஸ் மற்றும் பிரிண்டர்ஸ்,  நேதாஜி மருதையார் கல்வி அறக்கட்டளை இணைந்து, இதய மருத்துவம் மற்றும் பொது  மருத்துவ சிறப்பு முகாமை சனிக்கிழமை நடத்தின. நிகழ்ச்சிக்கு, லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.ஏ.தெட்சிணாமூர்த்தி தலைமை வகித் தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார், தமிழ்நாடு தனியார் பள்ளி கள் தாளாளர்கள் சங்கத் தலைவர் முனைவர்  ஜி.ஆர்.ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் நோயாளிகளை பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். தேவையா னவர்களுக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு,  ரத்த அழுத்தம், இசிஜி, எக்கோ பரிசோதனை  செய்யப்பட்டு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

தனிப்படை போலீசார் 5 பேர் சஸ்பெண்ட்

திருச்சிராப்பள்ளி, பிப்.3- தனிப்படை போலீசார் 5 பேர்  பணிநீக்கம் செய்யப்பட்டனர். திருச்சி மாநகரில் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணி யாற்றியவர் குமார். இவர் தலை மையில் லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை ஒன்று செயல்பட்டு வந்தது. அவ ருடன் தனிப்படையில் பணி யாற்றிய தலைமைக் காவலர்கள் சங்கராந்தி, ராஜேஸ்குமார் உள்ளிட்ட 5 பேர் திடீரென மாநகர ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்யப் பட்டனர். அவர்கள் லாட்டரி விற்ப னையை தடுக்க தவறியதால், நட வடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், 5 பேரையும் காவல்ஆணையர் காமினி பணியிடை நீக்கம் செய்து   உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட் ஏழை மீனவ மக்களுக்கானது அல்ல!

மீனவர் நலவாரிய துணைத் தலைவர் கண்டனம்

தஞ்சாவூர், பிப்.3-  ஒன்றிய அரசு அறிவித்துள்ள இடைக்கால  பட்ஜெட் ஏழை, எளிய, மீனவ மக்களுக்கா னது அல்ல;  கார்ப்பரேட் முதலாளிகளுக்கா னது என்று மீனவர் நலவாரிய துணைத்  தலைவர் தாஜுதீன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஒன்றிய அரசு இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டீசல், பெட்ரோல் விலையை குறைக்காமல் தாக்கல் செய்துள்ளது கண்டனத்துக்குரியது.  டீசல், பெட்ரோல் விலை ஏற்றத்தினால் பெரிதும் பாதிக்கப்படுவது ஏழை, எளிய மக்கள். ஜி.எஸ்.டி போன்ற வரிகளால் பாதிக் கப்பட்டுள்ள மக்கள் பொருளாதார ரீதியாக  மிகவும் பின் தங்கியுள்ளனர். இடைக்கால நிதி நிலை அறிக்கையில் மீனவர்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லாமல் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ஏற்றுமதி வாய்ப்பு, கடல் பொருட்கள் மூலம் மீனவர் களால் அரசுக்கு ஏற்படுத்தி தரப்படுகிறது.  ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடி அந்நிய செலாவணி, மக்களுக்கு சத்தான புரத உண வும் மீனவர்களால் வழங்கப்படுகிறது. ஆனால் மீனவர் முன்னேற்றத்திற்கான எந்த  திட்டமும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் படவில்லை.  10 ஆண்டு பாஜக ஆட்சியில் மீனவர்கள்  படும் துன்பங்களுக்கு அளவில்லை. செல வீனம் அதிகரித்து வருவாய் குறைந்து மீன வர்கள் மிகவும் பின்தங்கி வருகின்றனர். மீன வர்கள் மீன் பிடிக்க படகுகளுக்கு டீசலையே அதிகம் பயன்படுத்துகின்றனர். பயன்படுத் தும் டீசல் மூலம் ஒவ்வொரு மீனவர்களும் ஆண்டு ஒன்றுக்கு மறைமுக வரியாக பல லட்சம் செலுத்துகிறார்கள்.  உதாரணத்திற்கு சாலையையே பயன் படுத்தாமல், கடலை மட்டுமே பயன்படுத்தி வரும் மீனவர்களும், டீசல் மூலம் சாலை வரி  மற்றும் பசுமை வரி போன்ற வரிகளை ஒவ் வொரு லிட்டர் டீசலுக்கும் செலுத்துகின்ற னர். இந்நிலை நீடித்தால், மீனவ சமுதாயமே  இந்தியாவில் இல்லாமல் போய்விடும். மீனவ சமுதாயம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில்  ஒட்டுமொத்தமாக பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் ரூ.42 கோடியில் புற்றுநோய் வளாகம்

இயக்குநர் ஆர்.பாலாஜிநாதன் தகவல்

தஞ்சாவூர், பிப்.3-  தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.42 கோடியில் ஒருங்கிணைந்த புற்றுநோய் வளாகம் கட்டும் பணி 6 மாதங்களில் நிறை வடைந்து விடும் என மருத்துவக் கல்வி  இயக்குநர் ஆர்.பாலாஜிநாதன் தெரி வித்துள்ளார். உலக புற்றுநோய் தினத்தை யொட்டி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்று நோய் கதிர்வீச்சுத் துறை சார்பில் சனிக்கிழமை கர்ப்பப்பை வாய் புற்று நோய் கண்டறியும் முகாம் நடை பெற்றது. இதைத் தொடங்கி வைத்து மருத்துவக் கல்வி இயக்குநர் ஆர்.பாலாஜிநாதன் மேலும் பேசியதாவது: கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது பெண்களை அதிகமாகப் பாதிக் கும் இரண்டாவது புற்றுநோயாக உள்ளது. இதைத் தொடக்க நிலை யிலேயே கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்த முடியும். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2023 ஆம் ஆண்டில் கர்ப்பப்பை வாய் புற்றுநோ யால் பாதிக்கப்பட்ட 153 பேர் கதிர்வீச்சு சிகிச்சை பெற்று முழுமையாகக் குண மடைந்தனர். அனைத்து விதமான புற்று நோய்களால் பாதிக்கப்பட்ட மொத்தம் 1,242 நோயாளிகள் கதிர்வீச்சு சிகிச்சை  பெற்று முழுமையாகக் குணமடைந் துள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வர்களில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது  குறித்து மக்களிடையே விழிப்புணர்வு  ஏற்படுத்துவது மிகவும் அவசியமானது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது ரூ.42 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த புற்று நோய் வளாகம் கட்டப்பட்டு வருகிறது.  இப்பணி 6 மாதங்களில் முடிக்கப்பட்டு,  பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கண்காணிப்பாளர் சி.ராமசாமி, நிலைய  மருத்துவ அலுவலர் ஏ.செல்வம், விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ். மருதுதுரை, புற்றுநோய் கதிர்வீச்சுத் துறைத் தலைவர் எஸ்.விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு முன்னேறி வருகிறது அமைச்சர் எஸ்.ரகுபதி பெருமிதம்

புதுக்கோட்டை, பிப்.3- விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு முன்னேறி வரு வது பெருமைக்குரியது என மாநில சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி தெரிவித்தார்.  புதுக்கோட்டையில் மாநில அளவிலான 14 வயதுக் குட்பட்டோருக்கான குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகளை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து அவர்  பேசுகையில், “மாநில விளையாட்டுத் துறை அமைச்ச ராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு  வகைகளில் தமிழ்நாடு முன்னேறி வருகிறது. அகில இந்திய பள்ளிகள் கூட்டமைப்பு அண்மையில் நடத்திய தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் அதிக  பதக்கங்களைப் பெற்று தமிழ்நாடு 3-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கேலோ இந்தியா போட்டிகளில் அதிக  பதக்கங்களைப் பெற்று, தமிழ்நாடு 2 ஆவது இடத்தைப்  பெற்றிருக்கிறது” என்றார்.  சட்டப்பேரவை உறுப்பினர் வை.முத்துராஜா, மாவட்ட  வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளாதேவி, நகர்மன்றத் தலைவர்  செ.திலகவதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில் குமார், மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் சி.நிர்மலாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாய்கள் கடித்து  3 மாடுகள், 1 ஆடு உயிரிழப்பு கத்தரிநத்தம் கிராம மக்கள் அவதி

தஞ்சாவூர், பிப்.3-  கத்தரிநத்தம் கிராமத்தில் நாய்கள் கடித்ததால் கடந்த  ஒரு வாரத்தில் மட்டும் 3 கறவை மாடுகள், ஒரு ஆடு உயிரி ழந்தது. மேலும் நான்கு பேர் மருத்துவ சிகிச்சை பெற்று  வருகின்றனர். தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவிலை அடுத்த  கத்தரிநத்தம் கிராமத்தில் வடக்குத் தெரு, நடுத்தெரு, தெற்குத் தெரு, கோயில் தெரு என 4 தெருக்கள் உள்ளன.  இந்த ஊரில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு  ஏராளமானோர் நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்த  நாய்களால் தற்போது கிராம மக்கள் பெரும் அவதிக்கு  ஆளாகியுள்ளனர். மேலும், பிரசித்தி பெற்ற காளஹஸ்தீஸ்வரர் கோயில்  இந்த ஊரில் அமைந்துள்ளதால் ஏராளமானோர் தினமும்  கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இவ்வூரில் உள்ள சில நாய்கள் ஆடு, மாடுகளையும், மனிதர்களையும் கடித்து வருகிறது.  இதில்  கடந்த ஒரு வாரத்தில் மட்டும், குறிப்பாக குப்புசாமி, கணேசன், கண்ணன் ஆகியோரது பசு மாடுகளை நாய்  கடித்ததால், அந்த மாடுகள் சிகிச்சை பலனின்றி இறந்தன.  அதேபோல் சைதம்பாள் என்பவருடைய இரண்டு ஆடு களையும் நாய்கள் கடித்ததால் அவற்றில் ஒரு ஆடு சில  தினங்களுக்கு முன்பு உயிரிழந்தது. இதையடுத்து தற்போது அண்ணாதுரை (50) என்பவ ரையும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கோபால் (48) அவரது  மனைவி சங்கீதா (40), மகன் யோகேஷ் (14) ஆகியோ ரையும் நாய்கள் கடித்துள்ளன. இதனால் அவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அதிகரிக்கும் நாய்களின் தொல்லையால்,  அந்த கிராம மக்கள் அச்சத்திற்கும், அவதிக்கும் ஆளாகி யுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் அந்த கிராமத்தில்  உள்ள நாய்களை பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தப்பியோடிய வழிப்பறித் திருடர்கள்  விழுந்து 3 பேருக்கு எலும்பு முறிவு

புதுக்கோட்டை, பிப்.3 - புதுக்கோட்டையிலிருந்து அண்டக்குளம் செல்லும் சாலையில் உள்ள காட்டுப் பகுதியில் ஜன.29 அன்று இரவு  பூங்குடியைச் சேர்ந்த செந்தில்குமரன் (38) மற்றும் அவரது நண்பர் சீனிவாசன் ஆகியோர் காரில் ஊருக்குச் சென்றனர். அப்போது, வழிமறித்த சிலர் அவர்களைத் தாக்கியதுடன் பணம், கைப்பேசி, நகைகள், ஏடிஎம் அட்டைகளைப் பறித்துச் சென்றனர். இதுபோன்ற புகார்கள் ஏற்கனவே வந்திருப்பதால் தனிப் படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், செந்தில்குமர னிடமிருந்து பறித்துச் செல்லப்பட்ட ஏடிஎம் அட்டை களைக் கொண்டு பணம் எடுக்கப்பட்ட பகுதிகளிலுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை  மேற்கொண்டனர். இதில், புதுக்கோட்டை கீழ 4-ஆம் வீதியைச் சேர்ந்த  தினேஷ்(20), ராசாப்பட்டியைச் சேர்ந்த தயாநிதி (19),  போஸ் நகரைச் சேர்ந்த யோகமணி (22), அசோக்நகரைச்  சேர்ந்த ரூபன் (19), கீரனூர் பழைய மீன் மார்க்கெட் பகுதி யைச் சேர்ந்த விஜயபிரசாத்(28) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.  போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்ப  முயன்றபோது இரு சக்கர வாகனத்தில் இருந்து தவறி  விழுந்த விஜயபிரசாத்துக்கு கையிலும், தினேஷ் மற்றும்  தயாநிதிக்கு காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும்,  அவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.  யோகமணி மற்றும் ரூபன் ஆகிய இருவரையும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தமிழ் பல்கலை.யில் சமூகங்களுக்கான உரையாடல் கருத்தரங்கம்

தஞ்சாவூர், பிப்.3 -  தமிழ் பல்கலைக்கழகத்தில், சமூக அறிவியல் துறை சார்பாக, ‘சமூகங்களுக்கான உரையாடல்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.  இதில், சமூக அறிவியல் துறை,தலைவர் மற்றும் இணை பேராசிரியர் முனைவர் சா.சங்கீதா வரவேற்றார். கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் உதவிப் பேராசிரியர் முனைவர்  மா.அறிவானந்தன் கருத்துரையாற்றினார். வளர்தமிழ் புலத்தலைவர் முனைவர் குறிஞ்சிவேந்தன் வாழ்த்திப் பேசினார். தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் திருவள்ளுவன் தலைமை உரையாற்றினார்.  இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு அரசு, சமூக நீதி கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் பேசினார். அதனைத் தொடர்ந்து, குழு உரையாடல் அமர்வு நடைபெற்றது. அதில் ‘மாணவர்களும் சமூகமும்’ என்ற தலைப்பில், தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர்  முனைவர் பி.சுப்பிரமணியனும், ‘மருத்துவமும் சமூகமும்’ என்ற தலைப்பில், தஞ்சாவூர் ஆருத்ரா சைக்காலஜி கவுன்சிலிங் கிளினிக், மருத்துவர் பா.சந்திரபோசும், பொது  சமூகக் கூறுகள் என்ற தலைப்பில், தஞ்சாவூர் நீர்வளத்துறை  சமூக பாதுகாப்பு நிபுணர் எஸ்.வீரபாண்டியன் பேசினர். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பல்கலை.யின் சமூகப் பணித்துறை உதவி பேராசிரியர் மா.அறிவானந்தன் நன்றி  கூறினார். இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பங்கேற்ற வர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.