தஞ்சை பெரியகோவிலை அனுமதியின்றி ட்ரோன் கேமராவில் படம் பிடித்த 5 பேர் கைது
தஞ்சாவூர், அக்.28 - தஞ்சாவூர் பெரியகோவிலை அனுமதி யின்றி, ட்ரோன் கேமரா மூலம் படம் பிடித்த 5 பேரை கைது செய்த காவல்துறையினர், 2 ட்ரோன் கேமராக்களை பறிமுதல் செய்த னர். உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் மத்திய தொல்லியல் துறை பராமரிப் பில் உள்ளது. இக்கோவிலில் அனுமதி யின்றி ட்ரோன் மூலம் படம் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிலர் எந்தவித அனுமதியும் பெறாமல் ட்ரோன் கேமரா மூலம் பெரிய கோவில் முழுவதையும் படம் பிடித்து இணைய தளத்தில் பரப்பி வருவது தற்போது அதி கரித்துள்ளது. இதனால் கோவிலின் பாது காப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற அச்சத்தில் தொல்லியல்துறை அதிகாரிகள் உள்ளனர். இந்நிலையில், பெரியகோவில் நுழைவு வாயில் முதல் விமான கலசத்தின் உச்சி வரை ட்ரோன் கேமரா மூலம் படம் பிடித்த வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்க ளில் வைரலாகியது. இன்னும் சில இளை ஞர்கள் சமூக வலைதளங்களில் லைக் பெறு வதற்காக கோவில் உள்ளே நின்று ட்ரோ னில் படம் பிடித்தனர். அந்த வகையில், சதய விழாவின் போது, ராஜராஜசோழன் சிலை முன்பாக நின்று அனு மதியின்றி ட்ரோன் மூலம் படம் பிடித்த திருச்சி மாவட்டம் உறையூரைச் சேர்ந்த பிர காஷ் (21) என்பவரை மேற்கு காவல்துறை யினர் கைது செய்து, அவரிடம் இருந்த ஒரு ட்ரோன் கேமராவை பறிமுதல் செய்தனர். இதேபோல மதுரை மாவட்டம் உசிலம் பட்டியைச் சேர்ந்த கவியரசன் (21), அபித் (18), தென்னரசு (19), சூர்யா (19) ஆகிய நான்கு பேரும் பெரியகோவில் அருகே மேம் பாலத்தில் இருந்து, ட்ரோன் மூலம் படம் பெரியகோவிலை பிடித்துள்ளனர். மேலும், பொதுமக்களுக்கு இடையூறாக ட்ரோனை கூட்டத்திற்கு மத்தியில் இயக்கியுள்ளனர். இதுகுறித்து மத்திய தொல்லியல்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில், தஞ்சாவூர் தெற்கு காவல்துறையினர் 4 பேரை யும் கைது செய்து, அவர்களிடம் இருந்த ஒரு ட்ரோனையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 5 பேரும் சொந்த ஜாமீ னில் விடுவிக்கப்பட்டனர்.
சமுதாய தோட்டம் அமைக்க கலந்தாய்வு
மயிலாடுதுறை, அக்.28 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் செயல்படும் வளம் மீட்பு பூங்காவில் சமுதாய தோட்டம் அமைப்பதற்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சிகளை பசுமையாக்கி இயற்கை சூழலை மேம்படுத்தவும், குடியிருப்புகளில் தோட்டங்களை அமைக்க பொதுமக்களை ஊக்குவிக்கும் விதமாகவும், திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்பட்டு வரும் பேரூராட்சிகளின் வளம் மீட்பு பூங்காவில் சமுதாய தோட்டம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, தரங்கம்பாடி பேரூ ராட்சியை தேர்வு செய்து, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தார். பேரூராட்சி மன்றத் தலைவர் சுகுணசங்கரி குமரவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சமுதாய தோட்டம் (Community Garden) அமைக்க தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் குழு உறுப்பினர்களை தேர்வு செய்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
திறனறித் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பயிற்சி
தஞ்சாவூர், அக்.28 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளியில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில், தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வை எதிர் கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கான பயிற்சி, கருத்தரங்கம் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) கு.திராவிடச் செல்வம் தலைமையில் நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலர்கள் அ.அங்கையற்கண்ணி, கா.கலாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம் சிறப்புரையாற்றி னார். தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வு கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கை.செல்வம், வட்டார ஒருங்கி ணைப்பாளர் த.முருகையன் மற்றும் பேராவூரணி ஒன்றி யத்தைச் சேர்ந்த 11 அரசு நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த, இத்தேர்வை எதிர்கொள்ள உள்ள 90 மாணவ-மாணவிகள் மற்றும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர்.
நவ.26 வரை அரைவை கொப்பரை தேங்காய் கொள்முதல்
புதுக்கோட்டை, அக்.28 - ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அரைவை கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யப்பட உள்ளது என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரி வித்துள்ளார். இதுகுறித்து மேலும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை யின் கீழ் செயல்பட்டு வரும் ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு 500 மெ.டன், அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்ப னைக் கூடத்திற்கு 500 மெ.டன் என கூடுதலாக 1000 மெ.டன் உயர்த்தி நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. மேற்கூறிய ஒழுங்குமுறை விற் பனைக் கூடங்களில் 26.11.2023 வரை விவசா யிகளிடமிருந்து அரைவை கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது. எனவே இத்திட்டத்தின் மூலம் பயன டைய விரும்பும் விவசாயிகள் மேற்காணும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தங்க ளது நிலச்சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் கையொப்பமிட்ட அடங்கல், வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் இத்திட்டம் தொடர்பான விவரங் களுக்கு, ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பா.பிரதீபா-கைப்பேசி எண்.9750212273, அறந்தாங்கி ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் க.குணசேகரன்-கைப்பேசி எண்.8072871220 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த தேக்கு-கேணி பாலங்கள் சீரமைக்கப்படுமா? நவ.2-இல் வி.தொ.ச போராட்டம்
தஞ்சாவூர், அக்.28- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு கூட்டம் எஸ்.ஜகுபர்அலி தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோ.நீலமேகம் உரை யாற்றினார். ஒன்றியச் செயலாளர் வே.ரெங்கசாமி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், “கல்லணைக் கால்வாய், கழனிவாசல் பாசனக் கிளை வாய்க்கால், அம்மையாண்டி கிராமத்தில் உள்ள இரண்டு தேக்குப் பாலம் மற்றும் ஒரு கேணிப் பாலம் சேதமடைந்துள்ளது. இதனால் ஏரி, குளங்களுக்கு பாச னத்திற்கு தண்ணீர் நிரப்ப முடியாத நிலை உள்ளது. அதே வாய்க்காலில் ஆதனூரில் உள்ள கேணிப் பாலமும் உடைந்து சேதமடைந்து உள்ளது. எனவே பொதுப் பணித்துறையினர் இவற்றை உடனடியாக சீரமைத்து தர வேண்டும். நூறுநாள் வேலைத்திட்டத்தில் நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் நவம்பர் 2 அன்று ஆவணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது, நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு கிளைகள்தோறும் கொடி யேற்றி இனிப்பு வழங்குவது” என தீர்மானிக்கப்பட்டது.
ஊக்கத்தொகை வழங்கல்
பாபநாசம், அக்.28 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பி.எஸ்.என் பில்டர்ஸ் நிறுவனத்தின் தொழிலாளர்கள் தீபாவளியை கொண்டா டும் வகையில், நிறுவன உரிமையாளர் செந்தில்நாதன் தொழிலாளர்களுக்கு புத்தாடை, ஊக்கத்தொகையை வழங்கினார்.
மரக்கன்றுகள் நடல்
பாபநாசம், அக்.28 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஆதித்தன் அறக்கட்ட ளையின் 10 ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, மேலவீதியில் புங்கன் மரக்கன்றுகள் நடப்பட்டன. திம்மக்கடி அன்னை ஆதரவு இல்லத்திற்கு கொசு வலைகள் வழங்கப்பட்டன. இதில் அறக்கட்டளை துணைத் தலைவர் நைனா மலை, செயலர் சுகுமாறன், பொருளாளர் இராம நாதன், நிர்வாகக் குழு அறவாணன், திருநாவுக்கரசு, இராம லிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அம்பேத்கர் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
திருச்சிராப்பள்ளி, அக்.28 - திருச்சி மாவட்டம் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 2023 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் தமிழக அரசு விருது, 2024 இல் திருவள்ளுவர் நாளன்று வழங்கப்பட உள்ளது. 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான “டாக்டர் அம்பேத்கர் தமிழக அரசு விருது” பெற விண்ணப்பிக்க விரும்பு வோர், அதற்கான உரிய படிவத்தினை திருச்சி மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவல கத்தை அணுகி பெற்று கொள்ளலாம். பெறப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய முன்மொழிவு களை 5.11.2023-க்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
சமுதாய வளைகாப்பு விழா
புதுக்கோட்டை, அக்.28- புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட அளவிலான சமுதாய வளைகாப்பு விழா 300 கர்ப்பிணி பெண் களுக்கும், கந்தர்வக்கோட்டை வட்டாரத்தில் 100 கர்ப்பிணி பெண்களுக்கும் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அறந்தாங்கியில் 300 கர்ப்பிணி பெண்களுக்கு சனிக் கிழமை வளைகாப்பு விழா நடைபெற்றது. சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று, கர்ப்பிணிப் பெண்களுக்கு சீர்வரிசைகளை வழங்கினார். அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி. ராமச்சந்திரன், அறந்தாங்கி நகர்மன்றத் தலைவர் ஆனந்த், அறந்தாங்கி ஒன்றியக் குழுத் தலைவர் மகேஸ் வரி சண்முகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆளுநரை கண்டித்து மனு அனுப்பும் போராட்டம்
திருவாரூர்/கும்பகோணம், அக்.28- சுதந்திரப் போராட்ட வீரர் என்.சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக ஆளுநரை கண்டித்து மனு அனுப்பும் போராட் டம் நடைபெற்றது. திருவாரூர் திரு.வி.க. அரசு கல்லூரியில் நடைபெற்ற இயக்கத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் வீ.சந்தோஷ் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் செல்வா, துர்கா, சத்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கும்பகோணம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி (தன்னாட்சி) கிளை சார்பில் நடைபெற்ற இயக்கத்தில் மாவட்ட துணை செயலாளர் பிரதீப் மற்றும் கல்லூரி கிளை உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.
ஆன்-லைனில் வேலை: ரூ.27 லட்சம் மோசடி
தஞ்சாவூர், அக்.28 - தஞ்சாவூரில், பெண் ஒருவரிடம், ஆன்லைன் வேலை மூலம், அதிகளவில் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி, 27 லட்சம் ரூபாயை மோசடி செய்த மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையை சேர்ந்த வர் 36 வயது பெண். இவரது கணவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அந்தப் பெண் தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த அக்.10 அன்று இவரது வாட்ஸ்அப்-க்கு குறுஞ் செய்தி ஒன்று வந்தது. அதில் ஆன்-லைன் வாயி லாக, வீட்டிலிருந்தபடியே பகுதி நேரமாக வேலை செய்தால், தினமும் வருவாய் ஈட்டலாம் என தெரி விக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்தப் பெண், குறுஞ்செய்தியில் இருந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, அந்த பெண்ணிடம் பேசிய மர்ம நபர், சில நிறுவனத்தின் புகைப்படங்களையும் அனுப்பி, அதற்கு மதிப்பீடு செய்து கொடுத்தால், குறிப்பிட்ட தொகை தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதனை நம்பிய அந்த பெண், அவர்கள் கொடுத்த டாஸ்க்கை முடித்துள்ளார். சில நாட்கள் கழித்து பெண்ணுடன் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், அந்த பெண் ணிடம் இன்னும் சில ‘டாஸ்க்’ செய்தால் அதிக லாபம் பெற முடியும். அதற்கு முதலீடு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து, அந்தப் பெண் தனது தம்பி வீடு கட்டு வதற்காக லோன் மூலம் வாங்கி வைத்திருந்த 27 லட்சம் ரூபாயை கேட்டுப் பெற்று, பல தவணைகளாக ஆன்-லைன் வாயிலாக, அந்த மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். அதன் பின், அந்த மர்ம நபரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போது, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண், தஞ்சாவூர் இணையதளக் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இதுகுறித்து காவல் ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார். ஆன்-லைனில் வேலைவாய்ப்பு என கூறி அதிகள வில் மோசடிகள் நடக்கின்றன. இதை நம்பி இளைஞர் கள், பெண்கள் ஏமாற வேண்டாம் என இணையதளக் குற்றப்பிரிவு காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
நவ.25 திருவாரூரில் செந்தொண்டர் பேரணி
திருவாரூர், அக்.28 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட அலுவலகத்தில் செந் தொண்டர் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.என்.முருகானந்தன் தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேலவன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் பா.ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செந்தொண்டர் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஸ்டாலின், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.பி.ஜோதி பாசு, வாலிபர் சங்க மாநில துணைத்தலை வர் எஸ்.எம். சலாவுதீன் ஆகியோர் பேசினர். சிபிஎம் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி நிறைவுரையாற்றினார். வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் கே.டி.கேசவராஜ், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ப.சுர்ஜித் மற்றும் திருவாரூர், நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட ஒன்றிய பகுதியிலிருந்து செந் தொண்டர்கள் பங்கேற்றனர். இதில், நவம்பர் 25 அன்று திருவாரூரில் 500 செந்தொண்டர்கள் பங்கேற்கும் மாபெரும் செந்தொண்டர் பேரணி நடத்துவது என தீர்மா னிக்கப்பட்டது.
புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குக! தளுகையில் மனு கொடுக்கும் போராட்டம்
திருச்சிராப்பள்ளி, அக்.28 - புறம்போக்கு நிலங் களில் வசிப்போருக்கு மனைப் பட்டா வழங்க கோரி மனு கொடுக்கும் போராட் டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் துறை யூர் வட்டம் தளுகை ஊராட்சி யில் நீண்ட காலமாக புறம் போக்கு நிலங்களில் வசித்து வருபவர்களுக்கு, வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். நூறுநாள் வேலை யில் நிலுவையில் உள்ள கூலியை உடனே வழங்க வேண்டும். அனைவருக்கும் நூறுநாட்களும் வேலை வழங்க வேண்டும். பேரூ ராட்சி பகுதியில் நூறு நாள் வேலை திட்டத்தை அமல் படுத்த வேண்டும். தினசரி சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். மின் மயானம் அமைத்து தர வேண்டும். உப்பிலியபுரம் மேம்படுத் தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உரிய மருத்துவர், செவிலியர் களை பணியமர்த்த வேண் டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மனு கொ டுக்கும் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்திற்கு தளுகை ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினரும், சிபிஎம் ஒன்றியச் செயலாளருமான முத்துக்குமார் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி சிபிஎம் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெய சீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமநாதன் ஆகி யோர் பேசினர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.