தஞ்சாவூர், ஆக.22-
உறவினர் வீட்டு துக்கத்திற்கு சென்ற மூவர் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த ஒருவர் படுகாய மடைந்தார்.
தஞ்சாவூர் அருகே ஆலங்குடி கன்னிதோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் கூலித் தொழிலாளிகள் முனி யாண்டி (60), மதியழகன் (55), சுப்பிரமணி (54). இவர்கள் மூவரும் வடுவூர் அருகே புள்ளவராயன் குடிகாட்டில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு செவ் வாய்க்கிழமை காலை ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.
அப்போது, புலவர்நத்தம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், பெட்ரோல் போடுவதற்காக சாலையின் வலது பக்க வளைவில் திரும்பியுள்ளனர். இந்நிலையில் எதிரே வந்த நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான உணவுப் பொருள் ஏற்றி செல்லும் லாரி மோதியதில், மூவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
அப்போது, தஞ்சாவூரிலிருந்து வந்த லோடு வேன், சாலையில் கிடந்த மூவரின் மீதும் மோதியது. இந்த விபத்தில், முனியாண்டி மற்றும் மதியழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில், சுப்பிரமணி பலத்த காயம் அடைந்த நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அவரை அப்பகுதியினர் மீட்டு, சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மா பேட்டை காவல்துறையினர் இறந்தவர்களின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக பாபநாசம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.