வேதாரண்யம். டிச.4 - நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கத்திரிப்புலத் தில் கடந்த 2009 ஆம் ஆண்டு பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்து 9 குழந்தைகள் மற்றும் ஆசிரியை பலியான 12-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. நாகக்குடையான் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் உள்ள நினைவு ஸ்தூபியில், விபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள், பள்ளி மாணவ-மாணவி கள், கிராம மக்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். கடந்த 2009 டிசம்பர் 3 ஆம் தேதி நாகக்குடை யானிலிருந்து பள்ளிக் குழந்தைகளை அழைத்து வரும்போது, கத்தரிப்புலத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 9 பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியை சுகந்தி குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அப்பகுதி மக்கள் டிசம்பர் 3 ஆம் தேதியை துக்க நாளாக கடைபிடித்து வருகின்றனர்.