மயிலாடுதுறை சித்தர்காடு மறையூர் சாலையில் இயங்கி வரும் எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் (சிபிஎஸ்சி) மேல்நிலைப் பள்ளியில் 11 ஆவது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா, சர்வதேச விளையாட்டு வீரரும், இந்தியன் வங்கி துணை மேலாளருமான இளவரசி ஆகியோர், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். டார்கெட் கல்வி குழும தலைவர் மோகன்ராஜ், துணைத் தலைவர் சட்டைநாதன், செயலர் ராமதுரை, தாளாளர் வெற்றிவேந்தன் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.