districts

திருச்சி முக்கிய செய்திகள்

‘நாட்டை பாதுகாப்போம்’  கலைக்குழு பயணம் துவக்கம்

நாகப்பட்டினம், அக்.2- நாகப்பட்டினம் புதிய  பேருந்து நிலைய வளாகத்தில் “நாட்டை பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் கலைப்பய ணம் தொடங்கியது.  அக்டோபர் 2 அன்று தொடங்கிய இந்த கலைப்பயணம், மாவட்டம் முழுவதும் பல நாட்கள் தங்கி ஒன்றிய அரசின் மோச மான நடவடிக்கைகள் குறித்து, மக்கள் மத்தியில் நாடகம்  மற்றும் கதைப்பாடல் வழியாக பிரச்சாரம் செய்து, இறுதி யாக மதுரையில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க உள்ளது. இந்த கலை பயணத்தை திமுக மாவட்டச் செயலாளர் என்.கௌதமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்  செயலாளர் வி.மாரிமுத்து, சிபிஐ, விசிக, மதிமுக, காங்கி ரஸ், மமக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொடக்கி வைத்தனர்.

மாற்றுத்திறனாளிகள் சங்க புதிய கிளை துவக்கம்

கும்பகோணம், அக்.2- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் செட்டி மண்டபம் பகுதியில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் புதிய கிளை அமைக் கப்பட்டது. கூட்டத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த ராஜ லட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்  பழ.அன்புமணி பேசினார். சங்கத்தின் மாநகரப் பொறுப்பா ளர்கள் கலந்து கொண்டனர். சங்கத்தின் செட்டிமண்டபம் புதிய கிளையின் தலைவராக ஆர்.ராஜலட்சுமி, செயலாள ராக ஆர்.ராஜேஷ், பொருளாளராக சித்ரா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு  3 சக்கர ஸ்கூட்டர்  வழங்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, அக்.2 - தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க தொட்டி யம் ஒன்றிய மாநாடு நடுக்கோடியாம் பாளையத்தில் ஞாயி றன்று நடந்தது. மாநாட்டிற்கு ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ரவி, மாவட்டச் செய லாளர் ரஜினிகாந்த், மாவட்ட துணைத்தலைவர் சுப்ரமணி யன், ஒன்றிய தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். நூறு நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி, மாற்றுத் திறனாளிகளுக்கு தினந்தோறும் வேலை வழங்க வேண்டும்.  வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். 65 சதவீதம் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர  ஸ்கூட்டர் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் மேக மூட்டத்தால் ஏமாற்றம்

நாகர்கோவில், அக். 2- தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் சூரிய உதயமும் மறைவும் பார்க்க முடியாமல் ஏமாற்றம டைந்தனர். சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து கொண்டி ருக்கிறார்கள். குறிப்பாக கடந்த 5 நாள் தொடர் விடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. கன்னியாகுமரியில் அதிகாலையில் சூரிய உதயம் மற்றும் மாலையில் சூரியன் மறையும் காட்சியைக் கண்டு ரசிக்க முடியும். எனவே கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் இவற்றை பார்வையிட ஆர்வம் காட்டுவார்கள்.  கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் சூரியன் உதயமாகும் காட்சியை காண  அதிகாலை 5 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். ஆனால், மழை மேக மூட்டம் காரணமாக வானம் மந்தமாக காட்சி அளித்தது. இடையிடையே சாரல் மழையும்  பெய்து கொண்டிருந்தது. மழை மேகம் கலையாமல் தொடர்ந்து நீடித்ததால் கன்னியாகுமரி கடற்கரைக்கு சூரியன் உதயமாகும் காட்சியை பார்க்க முடியாமல் போனது. சுற்றுலா பயணிகள் அனைவரும்  பெரும் ஏமாற்றம் அடைந்தனர். அதுபோல மாலையில் மழை பெய்யத் தொடங்கி விடுவதால் சூரியன் மறையும் காட்சியைக் காண முடிவ தில்லை. தொடர்ந்து ஐந்து நாள்களாக சூரிய உதயத்தை யும் மறைவையும் காணமுடியவில்லை. மழை பெய்து  கொண்டே இருந்ததால் கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.

டிராக்டர் மோதி இறந்த  விவசாயி குடும்பத்திற்கு இழப்பீடு கோரி பொதுமக்கள் போராட்டம்

தூத்துக்குடி,அக்.2- தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர்  வள்ளிநாயகம்(65). செப்டம்பர்  29ஆம் தேதி புதுக்குடி ரயில்வே கேட் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த இவர்  மீது டிராக்டர் மோதியதில் சிகிச்சை பலனின்றி  ஞாயிற்றுக்கிழமை யன்று உயிரிழந்தார். இவருடன் வந்த கருப்பசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   இந்த விபத்து குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டர் ஓட்டுநரான சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  விபத்தில் இறந்த விவசாயி வள்ளிநாயகம் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரி அவரது உடலை வாங்க மறுத்து பொது மக்ககள்  வெள்ளூர் கிராமத்தில் உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்தது ஸ்ரீவை குண்டம் காவல் ஆய்வாளர்  அன்னராஜ் தலைமையி லான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படாத நிலையில் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.