districts

img

ஒன்றிய பாஜக அரசின் வரிக்கொள்கையால் ஏற்றுமதி ஆகாமல் டன் கணக்கில் தேங்கிய வெங்காயம்

திண்டுக்கல், மே 16- ஒன்றிய பாஜக அரசின் வரிவிதிப்புக் கொள்கை காரணமாக திண்டுக்கல் வெங்காயம் மார்க்கெட்டில் ஏற்றுமதி யாகாமல் டன் கணக்கில் வெங்காயம் தேக்கமடைந்தன.  

திண்டுக்கல் வெங்காய மார்க்கெட் தமிழ்நாட்டில் மிக முக்கியமான மார்க்கெட் ஆகும். இங்கிருந்து தூத்துக்குடி வழியாக  மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சின்ன  வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சமீபத்தில் ஒன்றிய பாஜக அரசு வெங்காய ஏற்றுமதிக்கு 46 விழுக்காடு வரை வரி விதித்துள்ளது. இதன் காரணமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வியாபாரிகள் பெரிய அளவுக்கு ஆர்வம்  காட்டாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்காயம் ஏற்று மதி செய்யப்படாமல் திண்டுக்கல்லில்  வெங்காயபேட்டை களில் உள்ள வெங்காய குடோன்களில் டன் கணக்கில் வெங்காயம் தேங்கியுள்ளன.

பொதுவாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில்  இருந்து விவசாயிகள் பெரிய வெங்காயத்தை திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு கொண்டு வருவார்கள். 

அப்படி 25 லாரிகளில் வந்த வெங்காயம் பெரிய அள வுக்கு ஏற்றுமதி ஆகாத காரணத்தால் தேக்கமடைந்துள்ளன. திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து  கொண்டு வரப்பட்ட சின்ன வெங்காயமும் ஏற்றுமதியாக வில்லை.

ஒன்றிய பாஜக அரசின்  தவறான வரிக் கொள்கை காரணமாக உள்ளூர் மார்க்கெட்டிலும் விலை போகாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படாமல் வெங்கா யம் அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று விவ சாயிகளும் வியாபாரிகளும் வேதனை அடைந்துள்ளனர்.

;