districts

பாடம் சொல்லிக் கொடுத்த அரூர் மக்கள்

தருமபுரி, ஜுன் 6 - தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளரை வெற்றிபெற விடாமல் தடுத்து நிறுத்தியது அரூர் தொகுதி மக்கள்தான் என்ற செய்தி வெளியாகி யுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட ஒரு தொகுதியிலும் அந்த அணியை துடைத்தெறிந்த பெருமையை அரூர் சட்ட மன்ற தொகுதியைச் சேர்ந்த வாக்காளப் பெருமக்கள் தட்டிச் சென்றுள்ளனர்.

 தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி யில் பாஜக கூட்டணியில் பாமக வேட்பாள ராக சௌமியா அன்புமணி போட்டியிட் டார். அவர் திமுக வேட்பாளர் ஆ.மணி யிடம் 21,300 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

ஆ.மணி (திமுக) 4,32,667 வாக்குகள் பெற்றார். சௌமியா அன்புமணி (பாமக) 4,11,367  வாக்குகள் பெற்றார். வாக்கு எண்ணிக் கையின் போது முதலில் பல சுற்றுக்கள்  சௌமியா அன்புமணி முன்னிலை யிலேயே இருந்து வந்தார். குறிப்பாக  தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாப்பிரெட்டிபட்டி, பென்னாகரம், தருமபுரி ஆகிய சட்டமன்றத் தொகுதி களுக்குட்பட்ட வாக்குகளை எண்ணும் போது தொடர்ந்து பத்தாயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று சௌமியா அன்பு மணி முன்னிலை வகித்தார்.

 இந்த நிலையில் அனைத்து ஊட கங்களும் பாஜக கூட்டணி ஒரு இடத்தில் வெல்கிறது என்றும் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40க்கு 40 வெல்ல முடியாது என்றும் பரபரப்புச் செய்திகளை தொடர்ந்து ஒளிபரப்பி வந்தன.  இந்த நிலையில் அரூர் சட்டமன்றத் தொகுதி வாக்குகள் எண்ணப்பட துவங்கிய பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. கடந்த 2019 தேர்தலில் அதிமுக, பாமக கூட்டணியில் இதே தருமபுரி தொகு தியில் அன்புமணி ராமதாஸ் போட்டி யிட்டார்.

அவர், திமுக வேட்பாளர் எஸ். செந்தில்குமாரிடம் 70ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அந்தத் தேர்தலில் அன்புமணியை வீழ்ச்சியடையச் செய்ததும் அரூர்  தொகுதி வாக்காளர்களின் வாக்குகள் தான். அப்போது அரூர் தொகுதியில் மட்டும் திமுக வேட்பாளர் அன்புமணியை விட 40 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றார். அதேபோல தற்போதும் சௌமியா அன்புமணி, அதே அரூர் தொகுதி வாக்குகளால் வீழ்த்தப்பட்டுள்ளார். இப்போதும் திமுக வேட்பாளர், அரூர் தொகுதியில் மட்டும் சௌமியா அன்பு மணியை விட 40ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளார். இந்த வாக்கு கள்  மூலம்தான் 21,300 வாக்குகள் வித்தி யாசத்தில் திமுக வேட்பாளர் ஆ.மணி வென்றுள்ளார்.

அரூர் தொகுதி, பல்வேறு சமூக மக்கள் உள்ள தொகுதி என்ற போதிலும் பட்டியலின, பழங்குடியின மக்கள் கணிச மாக வசிக்கும் தொகுதி ஆகும்.  வாச்சாத்தி போராட்டம் உள்ளிட்ட செங்கொடி இயக்கத்தின் மகத்தான போராட்டக் களம்  அரூர் சட்டமன்றத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. தருமபுரி நாடாளு மன்றத் தொகுதியின் இதர பகுதிகளில் கணிசமாக உள்ள குறிப்பிட்ட ஒரு சமூக மக்களின் வாக்குகளை குறி வைத்து பெற்றால் எளிதாக வென்றுவிடலாம் என  மனக்கணக்கு போட்ட பாமக மற்றும் பாஜக கூட்டணியின் கனவுகளைத் தகர்த்துள் ளனர் அரூர் மக்கள். இதன் மூலம், சாதிய அடிப்படையில் அல்ல; மக்களுக்கான சரி யான கொள்கை வழி நின்றே ஜனநாய கத்தில் வெற்றிபெற முடியும் என்ற பாடத்தை புகட்டியிருக்கிறார்கள் அரூர் மக்கள்.

;