districts

img

தருமபுரி மாவட்டத்தில் ஐடிபில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படமாட்டாது விவசாயிகளின் ஆவேச போராட்டத்திற்கு பணிந்த அரசு நிர்வாகம்

தருமபுரி, நவ.30- தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தை விவசாயிகள் முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஐடிபில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படமாட்டாது என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்தது. கோவை மாவட்டம் இருகூரிலி ருந்து, பெங்களூர் தேவனகுந்திவரை திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் வழியாக பாரத் பெட்ரோலியம் நிறுவனம் எண்ணெய் குழாய் பதிக்க திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தால் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, விவசாயிக ளின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள் விக்குறியாகும். எனவே, இத்திட் டத்தை விளை நிலங்கள் வழியாக கொண்டு செல்வதை கைவிடக் கோரி விவசாயிகள் தொடர் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில், தருமபுரி மாவட்டம் பாலக் கோடு, நல்லம்பள்ளி ஆகிய இடங்க ளில் விளை நிலத்தை கையகப்படுத் துவதற்கான அறிவிப்பாணை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  இதனைக் கண்டித்து பாரத் பெட் ரோலியத்தின் ஐடிபிஎல் எண்ணெய் குழாய் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பினர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவலறிந்து வந்த மாவட்ட வரு வாய் அலுவலர் ராமமூர்த்தி, கோட் டாட்சியர் (பொ) தணிகாச்சலம் மற் றும் காவல்துறையினர் ஆகியோர் விவசாயிகள் சங்கத் தலைவர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கே.என்.மல்லை யன், மாவட்ட செயலாளர் சோ.அர்ச்சு ணன், மாநில துணைத் தலைவர் பி. டில்லிபாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ. குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் எஸ்.தேவ ராசன், சிபிஐ விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சின்னசாமி, துளசிமணி, பழனி, விசிக மாநில துணை பொதுச் செயலாளர் வன்னியரசு மற்றும் ஐடி பிஎல் எண்ணெய் குழாய் பாதிக்கப் படும் விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர்கள் ஏ.எம்.முனுசாமி, ஈரோடு கி.வே.பொண்ணையன், நாமக் கல் பெருமாள், சேலம் ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொணடனர்.  

அப்போது, இத்திட்டத்தின் பணி கள் மற்ற மாவட்டங்களில் செயல் படுத்துவது குறித்து உரிய முடிவுகள் எடுக்கும் வரையில், தருமபுரி மாவட் டத்தில் திட்டப் பணிகள் எதுவும் மேற் கொள்வதில்லை என கோட்டாட்சி யர் (பொ) தணிகாச்சலம் எழுத்துப் பூர்வமாக உறுதியளித்தார். இதனை யடுத்து போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். 

;