districts

img

மாதர் சங்க அமைப்பு தின கொண்டாட்டம்

தருமபுரி, டிச.9- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 46ஆம் ஆண்டு அமைப்பு தின விழாவானது நாடு முழுவதும் எழுச்சி யுடன் புதனன்று கொண்டாடப்பட்டது. தருமபுரி மாவட்டம், செங்கொடிபுரத்தில் நடைபெற்ற நிகழ் விற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.கிரைஸாமேரி தலைமை வகித்தார். மூத்த உறுப்பினர் ரத்தனம்மாள் சங்க கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவில் மாவட்டத் தலை வர் ஏ.ஜெயா, பொருளாளர் பி.ராஜாமணி, மாவட்ட துணைத் தலைவர் கே.பூபதி, நகர தலைவர் ரங்கநாயகி, நகர செய லாளர் நிர்மலாராணி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் லில்லி புஷ்பம், மாவட்ட நிர்வாகி ராஜம் மாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சேலம்

மேட்டூர் நீதிமன்ற பேருந்து நிறுத்தம் அருகில் தாலுகா தலைவர் கே.சகுந்தலா தலைமையில் நடைபெற்ற அமைப்பு தின விழாவில் பார்வதியம்மாள் கொடியேற்றினார். இதில், மாவட்ட துணை தலைவர் கே.ராஜாத்தி, தாலுகா செயலா ளர் எஸ்.எம்.தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.