செவ்வாய், மார்ச் 2, 2021

districts

img

குறுகலான சாலையை அகலப்படுத்த வலியுறுத்தல்

தருமபுரி,ஜன.24- நல்லம்பள்ளியிலிருந்து லளிகம் செல்லும் குறுகலான சாலையை அகலப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டி கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரியிலிருந்து நல்லம்பள்ளி வழியாக லளிகம் வரை நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இதில், நல்லம் பள்ளி முதல் லளிகம் வரை உள்ள 7 கி.மீ சாலை மிகவும் குறு கலாக இருப்பதால் இவ்வழியே செல்லும் நான்கு சக்கர வாகனங்கள் மிகவும் சிரமப்பட்டு சென்று வர வேண்டிய நிலை உள்ளது. மேலும், தரை மட்டத்திலிருந்து சாலை உயர மாக அமைக்கப்பட்டுள்ளதால் சாலையின் ஓரத்தின் இரண்டு புறமும் பள்ளம் உள்ளது. இதனால் விபத்துகள் ஏற் படும் அபாயம் உள்ளது.

எனவே, இச்சாலையை அகலப் படுத்தியும், சாலை ஓரத்தில் பள்ளம் இல்லாமல் தார்ச்சாலை அமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி வாகன  ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;