districts

img

காலிப்பணியிடங்களை நிரப்பிடுக: மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜூன் 18- தமிழ்நாடு மின்வாரிய கணக்கீட்டு பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி, சிஐ டியு மின் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மின்வாரிய கணக்கீட்டு பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணக்கீட்டு பணி செய்திட கைபேசி/டேப் வழங்க வேண் டும். செல்போனுக்கு டேட்டா ரீசார்ஜ் செய்ய மாதந்தோறும் ரூ.500 வழங்க வேண்டும். கணக்கீட்டு பிரிவு ஊழியர்க ளுக்கு முறையே பதவி உயர்வு வழங்க வேண்டும். கணக்கீட்டாளர்களுக்கு இரண்டான்டுகளாக நிறுத்தி வைத் துள்ள விருப்ப இடமாறுதல் உத்தரவு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ் நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் எம்.ஆறு முகம் தலைமை வகித்தார். இதில்  மாநில துணைத்தலைவர் பி.ஜீவா, மாவட் டச் செயலாளர் தீ.லெனின் மகேந்தி ரன், பொருளாளர் திம்மராயன், இணைச்செயலாளர் கே.ஜெகநாதன், ஏ.கோவிந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவை

கோவை, டாடாபாத் மின்வாரிய மத்திய அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு மின்ஊழியர் சங்கத்தின் மாநிலச் செய லாளர் டி.மணிகண்டன் தலைமை வகித் தார். மாநகரத் தலைவர் பி.மதுசூதனன், கிளைத் தலைவர் எஸ்.சென்னியப்பன் முன்னிலை வகித்தனர். இதில், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மாநகரப் பொருளாளர் ஏ.சாதிக் பாஷா, கிளை நிர்வாகிகள் என்.ரத்தின குமார், எம்.மணிகண்டன், எஸ்.கலைச் செல்வி, பி.காளிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.