districts

img

தருமபுரியில் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் மக்கள் கிராம சபையில் மு.க.ஸ்டாலின் உறுதி

தருமபுரி,ஜன.18- ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட் டத்தில் பயன்பெறாமல் உள்ள  அனைத்துப் பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப் படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், மாரண்டஅள்ளி அருகே தூள்செட்டி ஏரி பகுதியில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக தலை வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், கடந்த பத்து வருட அதி முக ஆட்சியில் தமிழக மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இன் னும் நான்கு மாதங்களில் ‌ஆட்சி மாற் றம் ஏற்படும்.  திமுக ஆட்சியில் தரும புரி மக்களின் தாகத்தைத் தீர்க்க ஒகே னக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை  செயல்படுத்தப்பட்டது. ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக, குடிநீர் திட்டப் பணிகளை கிடப்பில் போட்டது. சட்டமன்றத்தில் பல முறை கேள்வி கேட்டும் உரிய பதில் இல்லை. எனவே, திமுக ஆட்சிக்கு வந்தவு டன்‌ அடுத்த ஐந்து மாதங்களில் ஒகே னக்கல் கூட்டுக் குடிநீர் கிடைக்காத பகுதிக்கு  நீர் கொண்டு வரப்படும் என்றார்.

மேலும், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அண்ணா பல்கலைக்கழகத்தை பாது காக்காமல் மத்திய அரசுக்கு தாரை வார்க்க அனுமதித்தனர். இதைய டுத்து மதச்சார்பற்ற கட்சிகளின் தொடர் போராட்டங்களின் மூலம் அத் திட்டம் கைவிடப்பட்டது. இதேபோல், திமுக ஆட்சியில் வராத நீட் தேர்வு, ஜெயலலிதா ஆட்சியிலும் வராத நீட் தேர்வு எடப்பாடி காலத்தில் தான் அமல்படுத்தப்பட்டது. இதனால் 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு, உயர் கல்வித்துறை அமைச்சராக இருக் கும் கே.பி.அன்பழகன்தான் பொறுப் பேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, இக்கூட்டத்தில், திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்.எல்.ஏ, எஸ்.செந்தில் குமார் எம்.பி,, வடக்கு மாவட்டச் செயலாளர் பி.என்.பி.இன்பசேகரன், வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயலாளர் பி.கே.முரு கன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.