districts

img

குடிநீர், மனைபட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம்

தருமபுரி, டிச. 15- மனைபட்டா. குடிநீர் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் செய்து தரக்கோரி விவ சாய தொழிலாளர் சங்கத்தினர் அரூர் வட் டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சிக் குட்பட்ட அம்பேத்கர் நகரில் பட்டு வளர்ச் சித்துறைக்கு சொந்தமான 16  ஏக்கர் நிலத் தில் அப்பகுதி மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். அனைத்து கிரா மக்களுக்கும் குடிநீர் பற்றாக்குறை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தினர் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்திற்கு, சங்கத்தின் ஒன்றியத் தலைவர் எம்.தங்கராஜி தலைமை வகித்தார்.

இதில், மாவட்டத் தலைவர் வி.ரவி,  மாவட்டச் செயலாளர் எம்.முத்து, மாவட்டப் பொருளாளர் இ.கே.முருகன், மாவட்ட துணை செயலாளர் கே.கோவிந்த சாமி, வாலிபர் சங்க மாவட்ட துணை  செய லாளர் சி.வேலாயுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  இதையடுத்து போராட்டத்தில் ஈடு பட்டவர்களுடன் அரூர் துணை காவல் கண்காணிப்பாளர் ரவிக்குமார், வட்டாட்சி யர் செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலு வலர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், குடிநீர் உள்ளிட்ட அடிப் படை வசதிகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் அடிப்படையில் போராட்டம் கைவிடப் பட்டது.

;