தருமபுரி, டிச.31- தருமபுரி மாவட்டம், அரூர் அரசு துவக்கப் பள்ளியில் தகடூர் புத்தக பேரவை, அரிமா சங்கம் மற்றும் அழகு அரூர் காப்போம் அறக்கட்டளை சார்பில் புத்தக கண்காட்சி துவங்கி யது. அரிமா சங்க தலைவர் சி.சிற்றரசு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சார் ஆட்சியர் மு.பிரதாப், அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார், தகடூர் புத்தக பேரவை தலைவர் இரா.சிசுபாலன், செயலாளர் மருத்து வர் இரா.செந்தில், நிர்வாகி இ.தங்கமணி, அழகு அரூர் காப்போம் அறக்கட்டளை தலைவர் ஏ.வி.சின்னசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இவ்விழாவில் ஏராளமான புத்தக பிரியர்கள் கலந்து கொண்டனர்.