districts

img

இலவசமனை பட்டாவுக்கான இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட எதிர்ப்பு மாவட்ட ஆட்சியரிடம் அருந்ததிய மக்கள் முறையீடு

தருமபுரி, டிச.7- அரசு வழங்கிய இலவச பட்டாவுக்கான இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட எதிர்ப்பு தெரிவித்து மோளையானூர் கிராம  மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.கார்த்தி காவிடம் மனு கொடுத்து  முறையிட்டனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டம் மோளையானூர் ஊராட்சிக்குட்பட் டது பூனையானூர் கிராமம். இங்கு அருந்ததிய மக்கள் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வரு கின்றனர். இவர்களில் பலருக்கு சொந்த வீடு இல்லை. இந்நிலையில், வீடு இல்லாத  பூனையானூர் மக்களுக்கு இவ்வூரின் அருகே  கடந்த 2004 ஆம் ஆண்டு மனைபட்டா வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சொந்தமாக வீடுகட்ட வசதி இல்லாத இம்மக்கள் அரசு வீடு கட்டிதர வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், இலவச மனைபட்டா வழங்கிய இடத்தில் அரசு அடுக்குமாடி வீடு  கட்டிதரப்படுவதாக தகவல் வெளிவந்துள் ளது. இதனையறிந்த, அக்கிராம மக்கள்  இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவ்விடத்தில்,  அடுக்குமாடி குடியிருப்பு கட்டாமல் மனை பட்டாவுக்கு சொந்தமான நபருக்கு தனியாக அரசு தொகுப்பு வீடு கட்டிதர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து முறை யிட்டனர். அப்போது, பாதிக்கப்பட்ட மக்க ளோடு அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்க மாவட்டதுணைசெயலாளர் பி.கிருஷ் ணவேணி உள்ளிட்டோர் உடனிருந்தார்.

;