districts

img

உலக கடல்பசு தினம் புதுப்பட்டினம் கடற்கரையில் வனத்துறை உருவாக்கிய மணல் சிற்பம்

தஞ்சாவூர், மே 29-  உலக கடல்பசு தினத்தையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள புதுப்பட்டினம் கடற்கரையில், தமிழ்நாடு அரசு  வனத்துறை, தஞ்சாவூர் வனக் கோட்டம் சார்பில், கடல்பசு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.  மனோராவை மையமாகக் கொண்டு, தமிழ்நாடு அரசு கடல்பசு பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள் ளது. மேலும் அரிய வகை கடல் வாழ் உயிரினமான கடல்பசுவை பாது காக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

மீனவர்கள் வலையில் சிக்கும் கடல்பசுவை உயிருடன் மீட்டு கடலில் விடும் மீனவர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டி வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க் கிழமை பேராவூரணி அருகே உள்ள புதுப்பட்டினம் கடற்கரையில் சுமார்  30 அடி நீளமும், 8 அடி அகலமும் கொண்ட கடல்பசு உருவ மணல் சிற்பத்தை மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி தலைமையிலான குழு வினர், சுமார் ஒரு மணி நேரம் 30  நிமிடத்தில் உருவாக்கினர்.

தொடர்ந்து மனிதச் சங்கிலி அமைத்து, ‘கடல்பசுவை பாதுகாப்போம்’ என உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வெளிவயல் கிராமத்தில், ஓம்கார் பவுண் டேஷன் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடல்பசு மற்றும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை மீட்டு, மீண்டும் கடலில் விட்ட மீன வர்கள் 9 பேருக்கு வனத்துறை சார்பில் ரூ.27 ஆயிரம் ரொக்கப் பணம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஓம்கார் பவுண்டேசன் அமைப்பின் இயக்குநர் பாலாஜி வரவேற்றுப் பேசினார்.

 இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி பேசுகை யில், “தஞ்சை மாவட்டம் மனோராவை தலைமை இடமாகக் கொண்டு, அதி ராம்பட்டினம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் வரை சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு, தமிழ்நாடு அரசு கடல் பசு பாதுகாப்பு மையத்தை அமைக்க உள்ளது. பாக் ஜலசந்தி கடல் பகுதியில் அருகி வரும் ஒரு அரிய கடல்வாழ் பாலூட்டி உயிரினமாக கடல் பசு உள்ளது. அவற்றின் வாழ்விடமான கடல் தாழைகளும் அழிக்கப்பட்டு வரு கின்றன.

கடல் வளத்திற்கு முக்கிய காரணமானது கடல் பசு. கடல் பசு பாதுகாக்கப்பட்டால் கடல் வளம் பாது காக்கப்படும்.  அதன் மூலம் மீனவர்கள் வாழ்வாதாரமும் பெரிதும் காப்பாற்றப் படும். நடப்பாண்டில் மற்றும் 3 கடல் பசு மற்றும் 10-க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் உயிருடன் மீட்கப்பட்டு, மீன வர்களால் கடலில் விடப்பட்டுள்ளன. அவர்களுக்கு தமிழ்நாடு அரசு  வனத்துறை சார்பில் பாராட்டுகளை யும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.   அரிய வகை கடல்வாழ் உயிரி னங்களை காப்பாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப் புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம்” என்றார்.  ஓம்கார் பவுண்டேசன் மேலாளர் அன்பு நன்றி கூறினார்.

;