districts

img

சாலை சீரமைக்கப்படுமா?

அய்யம்பேட்டை, அக்.15 -  தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பாபநாசம் ஒன்றி யத்தைச் சேர்ந்த கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் பட்டுக்குடி, கூடலூர், புத்தூர், குடிகாடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சி கொள்ளிட கரையை ஒட்டியுள்ள ஊர். இந்த ஊராட்சியில் உள்ள  சாலை 2006 ஆம் ஆண்டு போடப்பட்டதாகும். அதிகப் போக்குவரத்து உள்ள இந்தச் சாலை, பழுதடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக  சாலையோரம் அரிக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். 6 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்தச் சாலையை, புதி தாக தரமானதாக போட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.