தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், சக்தி பவுண்டேஷன் சார்பில், ரூ. 75 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. சக்தி பவுண்டேசன் நிர்வாகி சிவ.சதீஷ்குமார் தலைமை வகித்தார். கெயின் ஸ்போர்ட்ஸ் அகாதெமி தலைவரும், உடற்கல்வி ஆசிரியருமான எஸ். நீலகண்டன், கெயின் ஸ்போர்ட்ஸ் அகாதெமி பயிற்சியாளர்கள் லட்சுமணன், விக்னேஸ்வரன், குகன், சுகன்யாஅரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஹாக்கி பயிற்சியாளர் சுப்பிரமணியன், நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கௌரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.