districts

பகுதி நேர அங்காடி திறப்பு

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கைவனவயல் கிராமத்தில், கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறை சார்பில் பகுதி நேர அங்காடி திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் பகுதிநேர அங்காடியை திறந்து வைத்தார். இதற்கு முன்பு சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள உடையநாட்டிற்கு சென்று, அத்தியாவசியப் பொருட்கள் வாங்கி வந்த 235 குடும்ப அட்டைதாரர்கள் புதிய பகுதி நேர அங்காடி மூலம் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.