கபிஸ்தலம், டிச.7 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநா சத்தை அடுத்த கபிஸ்தலம் பூதங் குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய சட்ட நாள் விழா நடந்தது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான மதுசூத னன் ஆணையின் பேரில், பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடு வரும், பாபநாசம் வட்ட சட்டப்பணி கள் குழுவின் தலைவருமான அப்துல்கனி தலைமை வகித்தார். இதில் இந்திய அரசியலமைப்பு சட்டம், போக்சோ சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.